பகுதி-19

154 7 0
                                    

"நான் கல்யாணத்துக்கு அப்புறம் லாவண்யாவோட தனி குடித்தனம் போக விரும்புறேன்," என்று பிரசன்னா சொன்னான்.

அதை கேட்டு அவன் பெற்றோர் இருவரும் திகைத்து போய் பார்த்தனர், "என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? லாவண்யா இப்படி ஒரு condition போடும் போதே இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு நீ எடுத்து சொன்னியா?" என்று மகாலட்சுமி கோபத்துடன் கேட்டார்.

"இது லாவண்யாவோட condition இல்லை என்னோட condition, கல்யாணத்துக்கு அப்புறமாவது நான் என் வாழ்க்கைய full freedomஓட வாழணும்னு ஆசை படுறேன், இப்ப நான் உங்க முன்னாடி எதுக்கெடுத்தாலும் கை கட்டி நிக்கிற மாதிரி எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததுக்கப்புறமும் அதே மாதிரி வாழறதுல எனக்கு விருப்பமில்லை, அதனால இது அவசியம், இந்த எல்லா conditionsஉம் உங்களுக்கு okayன்னா நான் நீங்க சொல்ற லாவண்யாவ கல்யாணம் பண்ணிக்க தயார், இல்லைன்னா இந்த விஷயத்தை இத்தோட விடுங்க," என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அந்த அறையின் வெளியில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுபாஷ், "என்னடா பிரசன்னா இதெல்லாம்? தனிக்குடித்தனம் அது இதுன்னு என்னென்னமோ பேசுற, இப்படி பேசுறதால நம்ம அம்மா அப்பா மனசு என்ன பாடு படும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துகாதடா," என்று சொன்னான்.

"அப்பா அம்மா மனசு கஷ்ட படுறத பத்தி நீ பேசாத, உனக்கு அதுக்கான அறுகதயே இல்லை, அவங்க மனசு கஷ்டபடும்னு நீ நெனச்சிருந்தா எமிலிய கல்யாணம் பண்ணீட்டு வந்து நின்னுருக்க மாட்ட, infact இந்த எல்லா பிரச்சினையும் என் தலை மேல வந்து விழுந்ததுக்கு காரணமே நீதான், செய்யிறதையும் செஞ்சுட்டு எனக்கே புத்திமதி சொல்ல வந்துட்ட, உன்னை மாதிரி ஒரு அண்ணன் எதிரிக்கு கூட இருக்க கூடாது," என்று கடிந்து பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் பிரசன்னா.

தன்னறைக்கு வந்து அவன் மற்ற மூவரையும் conference call மூலம் அழைத்து நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன்னான். அதற்கு லாவண்யா, "எங்க வீட்ல ஒரே பொண்ணு அது இதுன்னு கிட்டத்தட்ட பெரிய dramaவே நடந்துருச்சு, நான் என் standல strongஆ இருந்ததால கடைசியா வேற வழி இல்லாம அவங்க ஒத்துகிட்டாங்க," என்றாள்.

உன்னருகில் நானிருந்தால் IIHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin