பகுதி-5

204 10 1
                                    

ஒரு மாதம் கடந்திருக்க, விக்டர் படுக்கையில் ஒரு ஆடவனோடு கிடந்தான், உடல் இங்கு இருந்தாலும் மனம் அன்று clubல் சந்தித்த அந்த ஆறடி இளைஞனையே சுற்றி வந்தது.

அவனை கண்ட அந்த முதல் நொடியே விக்டருக்குள் ஒரு புதிய மாற்றம், விழிகளை மூடினால் அவன் எண்ணமே, இதுவரை அவன் பெயரை கூட அறிந்திருக்கவில்லை, ஆனால் அவனை மீண்டும் மீண்டும் காண உள்ளுக்குள் இருந்து ஒரு குரல் சொல்லி கொண்டே இருந்தது, அந்த உணர்வுக்கு பெயர் சொல்ல தெரியாமல் தவித்தான் விக்டர்.

அந்த சிவந்த மேனியுடைய அழகனை அடுத்தடுத்த நாட்களில் அதே clubல் தேடிப் பார்த்தான், ஆனால் அவன் மீண்டும் அங்கு வரவேயில்லை, அவனை பற்றி விசாரித்தாலும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

அவனை பற்றிய யோசனையில் படுத்திருந்த போது அவனருகில் கிடந்தவன், "Wow! You're amazing, உன்னை பத்தி எல்லாரும் சொன்னது நெஜம்தான், you're really good in bed, இதோட அடுத்தது next month தான்," என்று சொன்னான்.

"அடுத்ததா?" என்று தன் பிருவத்தை உயர்த்தியவாறு கேட்டான் விக்டர்.

"Yes, இதோட அடுத்த மாசம் தான் நான் சென்னைக்கு வருவேன், அப்ப நம்மளோட second meeting வச்சுக்கலாம்னு சொன்னேன்," என்றான் அவன்.

"நான் கல்யாணம் ஆனவங்களோட second time வச்சுக்குறது இல்லை," என்று சொன்னான் விக்டர்.

"நான் கல்யாணம் ஆனவன்ங்குறதுக்காக என்னை reject பண்றியா? Why is that so?" என்று கேட்டான் அவன்.

அதற்கு விக்டர், "ஒரேயொரு reason தான், first of all இந்த கல்யாணம் ஆன ஆளுங்க எல்லாம் ரெட்டை படகுல சவாரி பண்றவங்க மாதிரி, அவங்களுக்கு எப்ப time கெடைக்கும்னு நான் காத்திருக்கணும், அது எனக்கு சுத்தமா பிடிக்காது, எனக்கு தேவைபடும்போது வர்றவன தான் எனக்கு பிடிக்கும்," என்று சொன்னான்.

"இவ்வளவு attitude நல்லதுக்கில்ல விக்டர்," என்று சொன்னான் அந்த ஆடவன்.

"நான் திமிர் பிடிச்சவன் தான், என் attitudeஅ நான் வச்சுக்குறேன், நீ உன் dressஅ போட்டுகிட்டு புறப்படுற வழிய பாரு, தன்னை பத்தி நெனைக்காம அடுத்தவங்களுக்கு advice பண்றவங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது, நீ முதல்ல கல்யாணம் பண்ண பொண்ணுக்கு உண்மையா இருக்க try பண்ணு, அதுக்கப்புறம் எனக்கு advice பண்ண வா, now get out of my place," என்று சொன்னான் விக்டர்.

உன்னருகில் நானிருந்தால் IITempat cerita menjadi hidup. Temukan sekarang