பகுதி-29

146 8 0
                                    

அன்று மாலை விக்டர் வீட்டிற்கு வந்ததும் பிரசன்னா நடந்தவை அனைத்தையும் சொல்லி, "இந்த விஷயத்துல என்ன செய்யலாம் விக்டர்? உங்களோட opinion என்ன?" என்று ஆலோசனை கேட்டான்.

"It's a complicated case பிரசன்னா, நாம இதுல வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடியாது, we've to think about it clearly," என்று விக்டர் சொன்னான்.

அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க பிரசன்னா சென்று கதவைத் திறந்தான், அங்கு சந்திரிகாவும், லாவண்யாவும் நின்று கொண்டிருந்தனர்.

பிரசன்னா ஒதுங்கி நிற்க இருவரும் வீட்டினுள் வந்தனர். "விக்டர் நாங்க ரெண்டு பேரும் Doctorஅ பாத்துட்டு வர்றோம், baby healthyஆ இருக்குன்னு அவங்க சொன்னாங்க," என்று சந்திரிகா சொன்னாள்.

விக்டர் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் அவள் சொன்னதை அவன் கவனிக்கவில்லை, இருவரின் முகத்திலும் குழப்பம் தாண்டவமாடுவதை கவனித்த லாவண்யா, "என்னாச்சு எதாவது problemஆ?" என்று கேட்டாள்.

"ஆமா லாவண்யா, கொஞ்சம் complicatedஆன problem தான்," என்று சொன்னான் பிரசன்னா.

"Let me guess, problem உங்க வீட்ல இருந்து தான?" என்று கேட்டாள் லாவண்யா.

ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான், "கண்டிப்பா அந்த குட்டி சாத்தான் தான் எதாவது பண்ணிருப்பான்," என்று பற்களை கடித்தவாறு சொன்னாள் சந்திரிகா.

"பிரச்சனை என்னமோ அவனால தான், ஆனா இது நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை வேற மாதிரியான பிரச்சனை," என்று சொல்லி நடந்தவற்றை அவர்கள் இருவரிடமும் விவரித்தான் பிரசன்னா.

சில நிமிடங்கள் யோசித்த சந்திரிகா, "நீங்க ரெண்டு பேரும் இந்த குழந்தைய adopt பண்ணிகிட்டா என்ன?" என்று கேட்டாள்.

அதை கேட்டு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். "அது சரியா வருமா?" என்று கேட்டான் விக்டர்.

"இதுவே நீ பழைய விக்டரா இருந்தா நான் இப்படி ஒரு suggestion குடுத்திருக்கவே மாட்டேன், ஆனா இப்ப நெறைய மாறிட்ட, you're definitely a parent material now, எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு நடுவுல ஒரு குழந்தை வரதான் போகுது, அதை நாம நாலு பேரும் சேந்து தான் வளக்க போறோம், அதுல இன்னொரு குழந்தையையும் சேத்து வளக்குறதுல என்ன பெரிய விஷயம்," என்றாள் சந்திரிகா.

உன்னருகில் நானிருந்தால் IIМесто, где живут истории. Откройте их для себя