பகுதி-16

160 8 0
                                    

"உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் தெரியுமா?" என்று லாவண்யாவின் அம்மா ஜானகி கேட்டார்.

லாவண்யா பதில் சொல்ல தெரியாமல் தடுமாற, "as a lawyer, case விஷயமா இவங்கள நாலஞ்சு தடவை meet பண்ணிருக்கேன்," என்று சொல்லி பிரசன்னா சமாளித்தான்.

"நீங்க ரெண்டு பேரும் தனியா எதாவது பேசுறதா இருந்தா வேற tableல உக்காந்து பேசுங்களேன்," என்று சொன்னார் ராஜசேகர்.

மகாலட்சுமி அடுத்து ஏதோ பேச வாயை திறப்பதற்கு முன் பிரசன்னாவும், லாவண்யாவும் எழுந்து அங்கிருந்து சற்று தள்ளி இருந்த tableஐ நோக்கி நகர்ந்தனர்.

தங்கள் பெற்றோரை விட்டு நகர்ந்து அமர்ந்தவுடன் பிரசன்னா, "thank God! நாம ரெண்டு பேரும் தப்பிச்சோம், வேற யாராவது உங்கள பாக்க வந்திருந்தா, அவனுக்கு உங்கள பிடிச்சு போய் okay சொல்லிருந்தான்னா, உங்க நெலமை என்னவாயிருக்கும்? நான் பாக்க வந்த பொண்ணு வேற யாராவதா இருந்திருந்தா, அவகிட்ட என்னென்ன சொல்லி இந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க வேண்டி இருந்திருக்குமோ?" என்று சொல்லி நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"நான் கூட அப்படில்லாம் யோசிச்சுட்டு தான் இங்க வந்தேன், வர்றவன எப்படியாவது convince பண்ணி இந்த கல்யாணத்துல இருந்து எப்படியாவது தப்பிச்சுடணுன்னு, ஆனா இங்க வந்து உங்கள பாத்ததும் எனக்கு வேற ஒரு யோசனை தோனுது," என்று சொன்னாள் லாவண்யா.

அப்போது அங்கு waiter வர, இருவரும் தங்களுக்கு தேவையானதை order செய்து, அவர் சென்ற பிறகு, "கொஞ்சம் புரியிற மாதிரி தெளிவா சொன்னீங்கன்னா நல்லாருக்கும்," என்று பிரசன்னா குழப்பத்துடன் கேட்டான்.

"எப்படி இருந்தாலும் இப்ப இல்லைன்னாலும் இன்னும் ரெண்டு வருஷத்துலயோ இல்லை மூனு வருஷத்துலயோ உங்க வீட்ல உங்களையும், என் வீட்ல என்னையும் குறிப்பிட்ட வயசுக்கு மேல நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்க, கல்யாணம் பண்ணியே ஆகணும்னு நம்ம உயிரை வாங்குவாங்க, அப்ப நம்மகிட்ட ரெண்டே option தான் இருக்கும் ஒன்னு அவங்ககிட்ட come out பண்றது இல்லை அந்த நேரத்துல அவங்க காட்டுறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை முழுக்க ரெட்டை வாழ்க்கை வாழறது, அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையா?"என்று கேட்டாள் லாவண்யா.

"So...? நீங்க என்ன தான் சொல்றீங்க?" என்று கேட்டான் பிரசன்னா.

அதற்கிடையில் waiter அவர்கள் order செய்ததை கொண்டு வர, வேறெதுவும் தேவையில்லை என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தனர், "நாம ஏன் இந்த கல்யாணத்தை பண்ணிக்க கூடாதுன்னு கேக்குறேன்? It'll be a convenient marriage, என் கழுத்துல ஒரு தாலி மட்டும் இருந்தா எவன் நம்மள கேள்வி கேப்பான்?" என்றாள் லாவண்யா.

மேஜையில் இருந்த உணவை உண்டபடி பிரசன்னா யோசிக்க நான்கைந்து table தள்ளி அமர்ந்திருந்த அவர்கள் பெற்றோர் அவர்களையே கூர்ந்து கவனிப்பதை கவனித்தான்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான், நாம ரெண்டு பேரும் singleஆ இருந்தா நீங்க சொல்றதுக்கு நான் ஒரு நிமிஷம் கூட யோசிக்காம okay சொல்லிருப்பேன், ஆனா நாம ரெண்டு பேருமே committed, நம்மளோட partnersஓட opinionஉம் கேக்க வேண்டியது அவசியம்," என்று சொன்னான் பிரசன்னா.

"அவங்ககிட்ட பேசிக்கலாம், அவங்க ரெண்டு பேரையும் நான் convince பண்றேன், இதோ இங்க வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்குங்களே இதுங்களுக்கு என்ன பதில் சொல்றது?" என்று லாவண்யா கேட்டாள்.

"You don't need to worry about those, அவங்கள நான் பாத்துக்கிறேன்," என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து எழுந்து தங்கள் பெற்றோர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தனர்.

"அம்மா, அப்பா போலாம் வாங்க," என்று சொன்னான் பிரசன்னா.

"பிரசன்னா எதுவும் சொல்லாம போனா எப்படிப்பா?" என்று கேட்டார் ரங்கநாதன்.

"ரெண்டு பேரும் பேசிருக்கோம், இன்னும் பேசி ஒத்து போற மாதிரி இருந்தா பிடிச்சிருந்தா கண்டிப்பா சொல்றோம்," என்று சொல்லி விட்டு பிரசன்னா அங்கிருந்து நகர்ந்தான்.

ரங்கநாதன் தன் நண்பரை பார்த்து, "நாங்க என்னன்னு அவன்கிட்ட பேசிட்டு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முடிவு சொல்றோம் சேகர்," என்று சொல்லி விட்டு மகாலட்சுமியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தொடரும்...

உன்னருகில் நானிருந்தால் IITempat cerita menjadi hidup. Temukan sekarang