பகுதி-20

160 9 0
                                    

அனைவரையும் ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு பிரசன்னாவும் லாவண்யாவும் ஒரு சுப முகூர்த்த தினத்தன்று வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதற்கு அடுத்த இருபது நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்து இரு குடும்பத்தாரும் சூழ விக்டர் குறிப்பிட்ட அந்த flatக்கு இருவரும் குடி வந்தனர்.

"பிரசன்னா வீடு ரொம்ப நல்லா அமஞ்சிருக்குடா, நாங்களே பாத்திருந்தா கூட இவ்வளவு நல்ல வீடு கெடைக்குமான்னு தெரியல," என்று வீட்டை சுற்றி பார்த்த ரங்கநாதன் சொன்னார்.

"எங்க ரெண்டு பேரோட workplaceஉம் இங்கிருந்து பக்கம் தான், அந்த ஒரே காரணத்துக்காக தான் இந்த வீட்டயே okay பண்ணீட்டேன்," என்று பிரசன்னா சொன்னான்.

"மாப்பிள்ளை இந்தாங்க இந்த பால சாப்பிடுங்க, நான் லாவண்யாவோட போய் அக்கம் பக்கத்துல இருக்கவங்கள பாத்துட்டு வர்றேன்," என்று சொன்னார் ஜானகி.

"அத்தை எதிர் flatக்கு நீங்க போக வேண்டாம், அங்க ஒரு single bachelor தங்கி இருக்காரு, நீங்க ரெண்டு பேரும் அங்க போய் நின்னா நல்லா இருக்காது, என்ன குடுக்கணும்னு சொல்லுங்க அங்க நானே போய் குடுத்துட்டு வர்றேன்," என்று சொன்னான் பிரசன்னா.

அவனது திட்டத்தை புரிந்து கொண்ட லாவண்யா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு யாரும் கவனிக்காத நேரத்தில் பிரசன்னாவை பார்த்து கண்ணடித்தாள், அதை கண்டு பிரசன்னா வெட்கத்தில் சிவந்து சிரித்தபடி மனதில் தன் காதலனை எண்ணிக் கொண்டான்.

அப்போது ஜானகி அங்கு வந்து ஒரு cupல் பாலோடு ஒரு சிறு கிண்ணத்தில் கொஞ்சம் உளர் பழங்களையும் வைத்து, அதை கொண்டு எதிர் வீட்டில் வசிப்பவருக்கு கொடுத்து விட்டு வருமாறு கூறினார்.

அதை எடுத்து கொண்டு பிரசன்னா விக்டரின் flatக்கு சென்று கதவை தட்டாமல் தன்னிடம் இருந்த இன்னொரு சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்று கதவை பூட்டினான்.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் என்பதால் விக்டர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். பிரசன்னா தான் கொண்டு வந்திருந்த பொருட்களை அங்குள்ள மேஜையில் வைத்து விட்டு நேராக தன் அன்பிற்குரியவனின் அறைக்குச் சென்று பார்த்தான்.

உன்னருகில் நானிருந்தால் IIOù les histoires vivent. Découvrez maintenant