❤கானல்-14❤

1.7K 98 20
                                    

"என்ன மேடம் தாலிய பார்த்து பார்த்து தனியா சிரிக்கிறீங்க....?" என்றூ கேட்டு வீட்டு ட்ரைவிங்கில் கவனம் செலுத்தினான்...

"அது ஒன்னுமில்ல தமிழ் ரொம்ப சந்தோசமா இருக்கு.... இப்போ என் மனசு முழுக்க உங்க மேல நம்பிக்க இருக்கு" என்று விட்டு குழந்தை போல் சினுங்கினாள்...

"இது போல எப்பவும் என்ன நம்பி என் கூட வாழு நான் கண்டிப்பா உன் மனச சந்தோசமா வெச்சிப்பேன்" என்று விட்டு புன்னகைத்தான்...

வீடு வரும் வரை தாலியை ரசித்து கொண்டே வந்தவள்....

"ஹாஷு வீடு வந்தாச்சி" என்றதும் தாலியை தன் காலர் வைத்த சல்வாரின் காலருக்கு கீழே வைத்து மறைத்தாள்....

ஆல்ரெடி வினோதிடம் இன்று அழைத்து வருவேன் என்ற விடயத்தை சொல்லி விட்டதால் அவன் சுரேஷ் தான்யாவிடம் கூறிவிட மூவரும் இவர்களது வருகைக்கு காத்திருந்தனர்

கதவை காவல் காரன் திறக்கும் சத்தம் கேட்டு மூவரும் வெளியே வந்தனர்....

வினோதை கண்டதும் "அண்ணா எப்படி இருக்கீங்க...?" என்று கேட்டு வைத்தாள் ஹாஷு....

"அட நல்லா இருக்கேன. தங்கச்சி...." என்று விட்டு "உள்ள வா" என்றான்
தான்யா ஆர்த்தி தட்டுடன் ஓடி வந்தாள்

"இது எதுக்குங்க தான்யா?" என்று கேட்டதும்

"தான்யா வா ஓம்ங் என் பெயர் எல்லாம் தெரியுமா.... அண்ணா சொன்னானா?"

"ஹம் ஆமா தமிழ் சொன்னார் அப்பறம் இவர் சுரேஷ் இல்ல அதுவும் தெரியும்" என்று கூறி சுரேஷை காட்டினாள்

"வாவ் சுப்பர்...ஆர்த்தி எதுக்குன்னு கேட்டீங்க இல்ல அது எதுக்குன்னா இன்னும் கொஞ்சம் நாள்ல என் அண்ணாவ கல்யாணம் பன்னிக்கிட்டு எனக்கு அன்னியாக போறீங்க ஸோ உங்க முதல் வருகை நல் வருகை ஆகட்டும்" என்று விட்டு கையை பற்றி உள்ளே கூட்டி போனாள்

அவளை அமர வைத்ததும் தான்யா உள்ளே சென்று விட்டாள்

கொஞ்சம் நேரத்தில் திரும்பி வந்தாள் அவள் பின்னாடியே லேகாவும் லேகாவை கண்டுதும் கண்டிப்பாக தமிழின் தாயாக இருக்கும் என்ற நோக்கில் எழுந்து நின்றாள்....

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now