❤கானல்-31❤

1.7K 103 26
                                    

அவர்களது காதல் அழகாக ஆரம்பித்து விட்டதை நினைத்து நினைத்து இரவு முழுவதும் சந்தோசப்பட்டாள் சனா

காலையில் "சனா என்னாச்சி?"

"எல்லாம் பர்பெக்ட்டுக்கா" என்று கூறி துள்ளி குதித்து கொண்டு அவளை கட்டி பிடித்து கொண்டாள்.....

சுமதிக்கு தங்கையின் இந்த சந்தோசமான முகத்தை பார்க்க பார்க்க கண்ணீர் வடிந்தது

"நீ நல்லா இருக்கனும் சனா எங்க நீயும் தமிழ கல்யாணம் கட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கே வருவியோ உனக்கும் சுதந்திரம் இல்லாம போயிறுமோன்னுல்லாம் ரொம்ப பயந்தேன் இப்போ சந்தோசம்?"

"ஆமாக்கா அது யாருன்னு நான் கெஸ் பன்னிட்டேன்க்கா"

"யாருடி சுரேஷோட பாஸ்ஸா? என்ன?"

"ஆமாக்க்கா அவரே தான் அண்ணா பாஸ்ஸும் இவரும் ஒன்னு தான்"

"கல்யாணம் பன்னிக்கிற ஐடியா ஏதும் உண்டாடி"

"பன்னிக்கிறதா சொன்னார்க்கா"
இதை செவியுற்றுக்கொண்டே வந்த சுரேஷும் தானுவும்

"முகம் முழுக்கா பல்பா இருக்கே கண்ணு கூசுது மா" என்று கலாய்த்த தானுவை ஓடி சென்று கட்டி கொண்டாள்

"என்ன சனா நம்ம மாப்பிள்ளைய நீ எப்ப மீட் பன்றதா இருக்க?"

"அண்ணா அவங்க அம்மாவோட நினைவு தினம் ஸோ அவர் அவங்க ஊருக்கு போறார் போயி வந்து மீட் பன்றதா சொன்னார்"

"அப்போ என் பாஸு என் மாப்பிளைன்னு கன்போர்மா?"-சுரேஷ்

"இல்லங்க இப்போ வரை உங்க போஸ் இவ காதலன் என்றது தான் கன்போர்ம் ஆகியிருக்கு" என்ற தானுவை சோர்ந்த முகமாக பா்த்தாள் சனா

"கோவிக்க வேண்டாம் டி நான் என்ன சொல்றேன்னா எதுலயும் மறுபக்கம் என்ன நடக்குதுன்னு அறியாம நாங்க எது மேலயும் யார் மேலயும் நம்பிக்கை வைக்க கூடாது நம்பிக்கை தர்ற மாதிரி உன் காதல்ல ஏதாச்சும் பெரிஷா நடக்கட்டும் அதற்கு அப்பறம் ரொம்ப நம்பிக்கை வெச்சி சந்தோச. படலாமே"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now