காலேஜ் விட்டதும் நேராக ஆபிஸுக்கே சென்றாள் தான்யா
'இன்னைக்கு வினோ அண்ணா சுரேஷ் கிட்ட பேசுறதா சொன்னாரே அவன் என்ன சொல்லி இருப்பான் என்ற கேள்விக்கான விடையை இரவு வினோத் வீட்டுக்கு வந்த பின் கேட்டு தெரிந்து கொள்ள மனமின்றி அவனை தேடி சென்றாள்....
கம்பேனி பிரச்சிணை ஒன்றுக்காக ஸிஸிடிவி போட்டேஜ்ஜை பார்த்து கொண்ஜஜஜடு நின்றவன் லைவ் வீடியோவில் தான்யா வருவதை கண்டு
"தானு எதுக்கு இங்க வர்றா ஏதாச்சும் ப்ராப்ளமா இருக்குமோ"என்று பதற்றத்துடன் அந்த ரூமை விட்டு தன் கேபினுக்கு சென்று அமர்ந்து கொண்டான்
"ஹாய் அண்ணா" என்று கூவி கொண்டே உள்ளே வந்தவளிடம் "எதுக்குடா இங்கல்லாம் வர்ற..... சரி உக்காரு" என்றதும் அமர்ந்து கொண்டாள்
"என்ன விஷயம் தானு" என்று விட்டு லெப்டாப்பை நோண்டினான்
"அண்ணா எக்சுவலி சுரேஷ் கிட்ட பேசிட்டீங்களா?" என்று தயக்கத்தூடன் கேட்டதும்
"பேசினேன் டா பட் அவன் அசஞ்சி கொடுக்க மாட்றான் ஸோ நாம வேற மாப்பிளை பார்ப்போம் நம்ம தங்கச்சிக்கு என்ன குறை அவன் பின்னாடி போறதுக்கு" என்று விட்டு தான்யாவை ஆழமாக பார்த்தான் அவள் பதிலையும் தான்
பூவாய் மலர்ந்து கொண்டே இருந்த அவள் முகம் முதல் முறை வாடிவிட்டது வினோவுக்கு கஷ்டமாக இருந்தாளும் அதை காட்டி கொள்ளாது அவளை சீண்டினான்
"அவனுக்கு அம்மாவ புடிக்கலைன்னு நமக்கு தெரியும்ல தானு அதான் ப்ராப்ளம் அவனுக்காக உன்னால அம்மாவ விட்டு கொடுக்க முடிஞ்சா சொல்லு மேல் கொண்டத பார்ப்போம்"
"அண்ணா" என்ற அவனது கையை பற்றியவள் ஹோவேன்று அழுது விட்டாள்
"அழுகாத டா தானு"
"அண்ணா எனக்கு சுரேஷ் வேண்டும் அண்ணா சின்ன வயசுல இருந்து அவனயே நினச்சிட்டு வாழ்ந்த என்னால அவன மறக்க முடியாது அவனுக்காக எங்கம்மாவ தானே விட்டு வர சொல்ற நான் வர்றேன் அம்மாவுக்கு நான் போறது வலிக்காது அவ இது வரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட அன்பா பேசினதில்ல எப்பவும் பிஸினஸ் தான் அவவுக்கு எல்லாமே என்னால அப்பாவயோ உங்களையோ தமிழ் அண்ணாவையோ சுரேஷ்க்காக விட்டு கொடுக்க முடியாது பட் அம்மாவ விட்டு கொடுப்பேன்..... அம்மாவுக்காக சுரேஷ நான் விட்றது என் காதலுக்கே அசிங்கம் அண்ணா ப்ளீஸ் அவன் கிட்ட சொல்லுங்க என்ன பிடிக்கலைன்னா அவன் கையாலயே கொன்னு போட சொல்லுங்க சந்தோசமா செத்து போறேன் பட்" என்றூ விட்டு தேம்பும் முன்னே ஒரே எட்டில் நெருங்கி அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்
ESTÁS LEYENDO
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
Ficción GeneralBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...