❤கானல்-16❤

1.7K 101 10
                                    

தன் அறைக்குள் நுழைந்தவன் பாத்ரூம் சென்று ப்ரஷ் ஆகிவிட்டு வந்து ஹாஷுவை எழுப்பினான்....

"கேட்டப் ஹாஷு" என்றதும் எழுந்து விட்டாள்
அவள் மனம் உறங்காமல் கண்கள் மட்டும் தான் உறங்கி இருந்தது தமிழை கண் அருகில் கண்டதும்

"தமிழ்" என்று முனங்கி விட்டு அவன் கைகளை பற்றிக்கொண்டாள்

ஹாஷினி வளர்ந்த விதம் தனித்து என்பதால் அவளது இந்த செயலில் அதிராது அவனும் அவள் கைகளை பற்றி.. "காம் டவுன் ஹாஷு எதற்காக இப்டி பதறுது உடம்பு.... வா சாப்டலாம்" என்றான்

"இல்ல எனக்கு பசிக்கலை" என்றாள்

"அது எப்டி பசிக்காம இருக்கும் சும்மா ரீல் விடாம என் கூட வா" என்று இழுத்து சென்றான்

டைனிங் ஹாலிற்கு பக்கத்தில் உள்ள ஸோபாவில் வினோதும் தனூஷும் அமர்ந்து இருந்தனர்.... இவர்களை கண்டதும் தனூஷ் மட்டும் ஹாஷினியை பார்த்து மென்மையாக சிரித்தான் பின்பு அவனே

"தமிழ் ஸிஸ்டர் கூட சேர்ந்து நீ முதல்ல சாப்டு யேன்னா நாங்க சுரேஷ் வந்ததற்கு அப்பறமா சாப்ட்றதால ஸிஸ்டர்க்கு லேட் ஆகும்" என்றான்

தனூஷ் இப்படி நீளமாக பேசுவதும் அதிர்ச்சி தான் அவனூம் சரி அவன் மனைவி சுமதி போன்று தான் கொஞ்சம்....

"இல்ல மாமா பரவாயில்ல நான் வைட் பன்றேன் நாம ஒன்னாவே சாப்டுவோம்" என்று விட்டு தமிழை பார்த்தாள் தமிழ் உற்பக்கம் பார்த்து நிற்பதை கண்டவள் திரும்பி பார்த்தாள்

லேகா டைனிங் ஹாலிற்கு வந்து கொண்டு இருந்தாள்... அவளை கண்டதுமமே மனதளவில் நடுங்கினாள் ஹாஷு

அருகில் வந்தவள் ஸோபாவில் அமர்ந்து

"சுமதி தான்யா இரண்டு பேரும் வாங்க"என்று குரல் கொடுத்தாள் அவர்கள் வந்த பின்னே வேலைக்கார பெண் சுந்தரையும் வீல் செயாரில் தள்ளிக்கொண்டு வந்தாள்

அனைவரையும் லேகா அழைத்ததன் காரணம் யாருக்கும் தெரியாது தான்யா தான் பொறுமை இன்றி "அம்மா எதற்கு கூப்ட எல்லாரும் வாந்தாச்சில்ல சொல்லு?"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now