❤கானல்-40❤

1.5K 82 11
                                    

எங்க தான் போயிருப்பா... என்று யோசித்து கொண்டே வீட்டுக்குள் வந்தாள் மதி....

லேகா வீல் செயாரில் அமர்ந்து மதியின் வருகையை பார்த்து கொண்டு இருந்தாள்....

அவள் உள்ளே வந்ததும் அருகில் ப்ரெக்பஸ்ட் எடுத்தூ கொண்டு நின்ற தனூஷிடம் "தனூஷ் மதி எங்க போயிட்டு வர்றா?" என்று அவனை உசுப்பேற்றினாள் தனூஷிற்கு உண்மையாகவே தெரியாது தான் அவன் தடுமாறும் போதே

"நான் வீட்டுக்கு போனேன் தனூஷ்" என்று விட்டு திமிராக அவர்களை கடந்தாள் இவர்களின் உரையாடளை செவியுற்றும் எந்த ரியக்ஷனுமின்றி சடலம் போன்று சாப்பிட்டு கொண்டு நின்றான் தமிழ்

"அம்மா அவ சொன்னத கேட்டல்ல வீட்டுக்கு போனாவாம்"

"ஆஹ உனக்கு தெரியாது அவ எங்க போனான்னு அவ சொன்னா அத அப்படியே நம்புவியா...."

"என்ன அத்தை உங்க அட்டகாஷத்த இதோ உங்களோட முட்டாள் பையன் தமிழ் கிட்ட ஆடுங்க என் புருஷன் கிட்ட உங்க அயோக்கியதனத்த காமிச்சி மூக்குல.... அடி வாங்கிக்க வேண்டாம்" என்று விட்டு அவளை முறைத்தாள்

"மறியாதையா பேசுறத என் அண்ணா உனக்கு கத்து கொடுக்கலை போல.... டேய் தனூஷ் நீ ஆசப்பட்டவள்ன்னு நான் என் ஸ்டேடஸ் பார்க்காம இவள உனக்கு கட்டி வெச்சேன்... பட் இப்போ இவ பேசுறத பார்த்து நீயும் சும்ம இருக்கல்ல... பார்த்தியாடா தமிழு... அம்மாவுக்கு இங்க என்ன மறியாதைன்னு"

"ஆமா ஆமா உங்கண்ணா எனக்கு மறியாதை கத்து தரலை தான் பட் உங்கப்பன் உங்களுக்கு மறியாதை நேர்மை ஒழுக்கம்ன்னு ஏதாச்சும் ஒன்ன பழக்கி தந்தாரா இல்லல.... அதான் இப்டி பாவப்பட்ட ஜென்மமா இருக்கீங்க" என்று விட்டு

"தனூஷ் என்ன எதிர்த்து ஒரு வார்த்தை பேசினா அது அவனையும் தமிழ மாதிரி முட்டாளாக்கிடும்.... அவன் யாருக்காக வேண என்ன திட்டலாம் உங்களுக்காக இல்ல" என்று விட்டு சென்று விட்டாள்

தனூஷும் எழுந்து சென்று விட.... தமிழ் மட்டும் அப்படியே.....இட்லியோ பிசைந்து பிசைந்து நின்றான்...

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Where stories live. Discover now