❤கானல்-23❤

1.9K 90 11
                                    

"என்ன சுரேஷ் அண்ணா வெளிய கூப்டு பேசுறீக உள்ளே வர மாட்டீகளா?"

"யேன் தாயி வந்து பிரச்சிணைய விலைக்கு வாங்க நான் யென்ன பன்னியாக்கும்?" என்று அவள் பேசிய விதமாக பேசிவிட்டு சிரித்தான்

"அப்பறம் எப்டி இருக்கீங்க தானு எப்டி இருக்கா...?"

"போயி ஒரு வருஷம் ஆகின மாதிரி தனூஷ் மட்டும் தான் பீல் பன்றான்னு நினைச்சா இங்க நீயுமா?"

"புரியல்ல மாமா பெயர் எதுக்கு சொன்னீங்க புரிய சொல்லுங்க உங்க அக்கா மாதிரி புதிர் பேச்சுலலாம் டக்குன்னு புரிஞ்சிக்கிற அளவு படிச்சவள் இல்லல்ல" என்றதும்

"நீ வேற மொட்டைக்கும் முட்டுங்காலுக்கும் முடிச்சில் போட்டு கிட்டு... அது என்னான்னா ப்ரியா உங்க மாமா தனூஷ் இருக்குல்ல எங்கக்காவ பார்க்க ஒரு நாளைக்கு மூன்று தடவை எங்க வீட்டு ஏரியாவுக்கு வர்றான் 'என்ன இந்த பக்கம்ன்னு கேட்டாக்க மொக்கை மொக்கையா காரணம் சொல்லிட்டு அக்கா ரூமயே உத்து உத்து பார்ப்பான் அப்பறம் யென்ன ஒரு நாள்க்கு ஆயிரம் மெஸேஜ் 'ஐ மிஸ் யு ஐ மிஸ் யூ' ன்னு பல்லாயிரம் கால் சாப்டியா குடிச்சியா படுத்தியான்னு கேட்டுடு அதான் அவன் மட்டும் தான் ரொம்ப பீல் பன்றான்னு பார்த்தா நீயும் எப்டி இருக்கீங்க? தான்யா எப்டி இருக்கா? வீட்டுக்கு வரலாம்ல அது இதுன்ற அவ்ளோ பாசமா?"

"இல்லையா பின்ன என் மேல பாசம் காட்டி என்னயும் மதிச்சவங்க எல்லாரும் போயிட்டா மிஸ் பன்ன மாட்டேனா அண்ணா அப்பறம் நீங்க சொல்றது சரிண்ணா தனூஷ் மாமா பாவம் சுமதிக்கா போன நாள்ல இருந்து சாப்டவே இல்ல யார்டயும் பேசவுமில்ல லேட்டா வந்து தூங்குவார் காலங்காத்தாவே போயிட்றார்"

"பார்த்தியா பார்த்தியா நீ திரும்ப திரும்ப வீட்ட விட்டு நாங்க போயி ஒரு மாசம் ஆயிட்ட மாதிரி பேசுறத...." என்று அவன் கேட்டதும் தான் வெடித்து சிரித்தாள்

"ஒகே ப்ரியா பீ சீரியஸ்" என்று விட்டு

"நீ இன்னைக்கு கோயிலுக்கு போனியா?"

கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang