அவர்கள் இருவரும் வந்து அமர்ந்ததும் அவர்களிற்கு பரிமாறினாள் மதி
"என்ன தமிழ் ப்ரியா ஒரு மாதிரி இருக்காள்?"
"என்ன ஒரு மாதிரி இருக்காள் அவ நல்லா தானே இருக்கா" என்று பதறினான் தான் மனைவிக்கு கை நீட்டி விட்டோமே என்றதை மறைக்கவே அந்த பதற்றம்.....
"அப்டி எதுவும் இல்ல ப்ரியா இன்னைக்கு என்கூட வெளிய போனப்போ கால் எங்கயோ பட்டுறிச்சாம் அதான் அவ சோர்ந்துட்டா அத்தை" என்றதும் மதியை முறைத்தாள் லேகா
"மதி பரிமாறினது எல்லாம் போதும் வந்து உக்காரு" என்றான் தனூஷ்
சுமதியும் மை சிலிர்த்தவளாக சென்று அமர்ந்தாள் உடனே தனூஷ் அவளது தட்டில் உணவை வைத்தான் "போதும்ங்க" என்று புன்னகைத்தவளாக கூறி விட்டு லேகாவை பார்த்தாள் 'ச்சே இதுங்க எப்போ ஒன்னூ சேர்ந்திச்சி படாத பாடு பட்டுல்ல பிரிச்சேன்.... ஓவரா துள்ளாத டி திரும்ப உனக்கு வைக்கிறேன் ஆப்பு'
லேகாவிற்கு கைக்கு எட்டாத தூரத்தில் தான் மீன்குழம்பு இருந்தது மதிக்கு மிக அருகில் எனவே "மதி எனக்கு குழம்பு வைக்கிறியா?" என்று கேட்டதும் தான் சண்டைக்காக காத்திருந்தவள் "பரிமாற எல்லாம் முடியாது பசிச்சதுன்னா எடுத்து கொட்டிகங்க?" என்றாள் திமிராக தனூஷும் ப்ரியாவும் அதிர்ந்தனர் 'இது என்ன புது பிரச்சிணை' என்று ஆனால் இருவரும் வாய் திறக்கவில்லை
அவ்வளவு தான் தமிழ் நெருப்பாய் எழுந்து "ஹேய் மதி யார்கிட்ட பேசுறதுன்னு தெரிஞ்சி தான் பேசுறியா?"என்று கர்ஜித்தான்
அதற்கு கூலாக "யேன் நான் அன்னை தெரேஷாகிட்டயா பேசிட்டு இருக்கேன் கேவலம் உங்கம்மாகிட்ட தானே" என்றாள் திமிரிலும் திமிராக
அதை கேட்டதும் இன்னும் கொதித்தவன் "டேய் அண்ணா உன் அம்மாவ உன் பொண்டாட்டி என்னா பேசுறான்னூ பார்த்தியா?"
"யாணையோட காலம் முடிஞ்சிறுச்சி இது பூனையோட காலம் இதுல பேச என்ன இருக்கு" தனூஷ்
"ச்சீ பெத்தவங்கள மதிக்க தெரியாத நீ எல்லாம் த்தூ"
"எங்களுக்கு மதிக்க தெரியும் பட் நாங்க தெளியாத பைத்தியமில்லை உன்ன மாதிரி" என்று தனூஷ் சொன்னதும் கொதித்து எழுந்தவன்
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...