சாப்பாட்டு அறைக்கு ஹாஷு சென்றதுமே தான்யா பார்த்து பாரத்து கவனித்தாள்
"அன்னி அத சாப்டு பாருங்க நல்லா இருக்கும்" என்று ஒன்றை கொடுப்பாள் அதை சாப்பிட்டதும் வேறு ஒன்றை எடுத்து "அன்னி இத சாப்டுங்க அத விட நல்லா இருக்கும்" என்று கூறிக் கூறியே அனைத்தையும் சாப்பிட வைத்தாள்....
உடைந்த மனதை ஒட்ட வைக்க தான்யா இருப்பதும் சந்தோசம் தானே
சுமதி அதிகமாக நேரத்தை செலவு செய்யும் இடம் வீட்டு தோட்டம் தான் என்றும் போல் அங்கு அமர்ந்து இருந்தாள் அவள் அங்கு தான் எப்போதும் இருப்பாள் என்பது வீட்டில்
அனைவருக்கும் தெரியும் இது அறியாத ஹாஷினி தனியா இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தோட்டத்திற்கு சென்றாள்அங்கு சுமதி அமர்ந்து இருப்பதை கண்டதும் தன் அறைக்கே சென்று விடுவோம் என்று திரும்பி விட்டாள் இதை கவனித்து விட்ட சுமதி
"ஹாஷினி கொஞ்சம இங்க வாங்க நான் ஒன்றும் பேயில்ல" என்றாள்....
சுமதியின் இந்த பேச்சில் அவளுக்கு இனம்புரியாத சந்தோசம் 'இந்த வீட்டுல அத்தை மாதிரி தான் எல்லோரும்ன்னு நினைத்தது தப்பு இவங்களும் நல்லவங்களா இருக்காங்க' என்று திருப்தியுடன் திரும்பி நின்று சுமதியை பார்த்து சிரித்தாள்....
"வாங்க ஹாஷினி" என்று மீண்டும் அழைத்ததும் துள்ளிகுதித்து கொண்டு ஓடினாள்
"எப்டி இருக்கீங்க?"என்ற சுமதியின் கேள்விக்கு நல்லா இருக்கேன் என்பது போன்று தலையாட்டினாள்
"எங்க வீட்டுக்கு வந்து இருக்க எப்டி<feel>பீல் பன்ற.....எல்லாம் பிடிச்சிருக்கா இனி இங்க தான் இருக்கனும் அது பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள்
"தமிழ் கூட இருக்கன்....அதனால பிடிச்சிருக்கு...."என்று விட்டு அவளே "கொஞ்சம் பயமாகவும் இருக்கு அத்தை என்ன போயிட சொல்லி இருக்காங்க அதனால அவங்கள எதிர்த்து இங்க தங்கிக்க பயமா இருக்கு" என்றாள்
சுமதிக்கே இடி தலையில் விழுந்தது போன்றே ஆகி விட்டது
'என்னது அத்தை போக சொல்லிட்டாங்களா... அப்போ சனா தான் மருமகளா வருவாளா நெவர்....' என்று மனதில் ஒரு முடிவோடு
YOU ARE READING
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
General FictionBorn-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்த...