திருமணம்

134 20 110
                                    

உன் உச்சிமுகர்ந்து
உள்ளங்கவர்ந்து
உன் விரல் பிடித்து வீறு நடை போட செல்லும் வேலையிலே

உன் அழகை கண்டு
நாதஸ்வரமும் மேளதாளங்களும்
கூத்தாடி
குமுறும் ஓசையிலே

அங்கே தாம்பூலத்தில் தாலி ஒன்று
உன் சங்கு கழுத்தில் தவழப்போகும் ஆனந்தம் கொண்டு
தத்தாளம் போடுதடி

உன் தோழின் மீது தோரனமாக்கப்பட்ட
ரோஜாவும் முல்லையும்
தாமரையும் தாழம்பூவும்
உன் வேல்விழி பார்வை கண்டு
வெட்கி தலைகுனிய...

நீ நடந்து வரும் வேலையிலே
உன் பாதச்சுவடு மொழிகளுக்கு
கால்கொழுசு கலைஞன்
இசையமைக்க....

உன் கைகோர்த்து காதிலே கூறும்
மொழி யாதெனில்
காலங்கள் கடந்தாலும் என்
காதல் உன்னை விட்டு கடக்காதடி

என் வயது முதிர்ந்தாலும் நான்
கூறிய இந்த வார்த்தைகள்
உதிராதடி...

வெட்கம் கொண்டு வேள்வியின்
சாட்சியாக என் கைப்பிடித்தவளே
இனி வேறொரு பிறவி எடுத்தாலும்
நீயே வரமாய் வரவேண்டும் என்
மனைவியாக😍😍😍😍😘😘😘😍😍💑💑💏💏💏

கானல் கவிதைகள்Where stories live. Discover now