அன்பு நூலினையும்
பண்பு தறியினையும் கொண்டு முத்தும் பவளமும் கோர்த்து
முடிந்து நெய்தானே
நெசவாளன் சேலை ஒன்று.....அச்சேலை காலை மாலை என பல சோலைகளை கடந்து......
என்னவளின் மேனியை மெருகேற்றும் போது
வெட்கத் திரட்ச்சியில்
சேலையும் திரண்டது
அவள் கண்களோ உருண்டது..அதை கானகிடைக்காமல்
என் வாழ்வும் இருண்டது......பூக்களுக்கு சேலை கட்ட புடவை நூல் போதாதடி....
இந்த பூவுலகில் உள்ள பொன்னை எடுத்து நூலாக்குங்கள்...
வைரத்தை கொண்டு தறி செய்யுங்கள்....வானத்தின் வண்ணத்தை எடுத்து சாயம் தீட்டுங்கள்....
மின்னல்களை பிடித்து பின்னுங்கள் சேலையோடு.....ஓ சேலையே என்ன தான் வரம் வாங்கி வந்தாய்... எவரிடம் வரம் வாங்கி வந்தாய்....
இப்படி ஒட்டியும்....எட்டியும்.... கட்டியும் தழுவுகிறாயே.... என் அவள் மேனியை....எனக்கு ஆசை வருகிறது அந்த சேலை நானக இருக்க கூடாத என்று.....