வேள்வியில் பிறந்தவளும் நீயே..
சில கேள்விகளுக்கு விடை ஆனவளும் நீயே..உன் தோற்றத்தில் தொலைந்த பல மனங்கள் உண்டு..
உன் மாற்றம் எனும் முன்னேற்றத்தில் சிறக்குதடி இந்த மண்ணும் இன்று..பார்வையிலே
பகுத்தறிவை ஊட்டி..
இந்த பாரினிலே நீதியை நிலைநாட்டிய நீதி தேவதையே..உன் காலில் அரையப்பட்ட கால் சங்கிலி கழன்று ஓட...
காலத்தின் மாற்றம் காண கர்வம் கொண்டு வா..உன்னை அடைத்து வைத்த அறைக்கதவுகள் அலறி கொள்ளும்படி
இந்த அகிலத்திலே அழியாத மாற்றம் காண வா..உன்னை ஒதுக்கி வைத்த தீட்டிற்கும் தீண்டாமைக்கும் மாற்றம் காண மாற்று விடையாய் வா..
உன்னை அலட்சியமாய் பார்க்கும் இந்த ஆண் சமூகம் முன்னால்
அழியாத சுவடாய்... தீயின் கணலாய்..நெருப்பின் அனலாய் மாற்றம் காண மனதிலே உறுதி கொண்டு வா....அடுப்படியில் அடைந்து ஒழிந்து இருண்டு போன உன் கண்களும் கன்னங்களும்... உன் மாற்றத்தினால் மாயம் காணுமே உன் காயம் ஆற்றுமே...
பெண்ணே,பேதையே,பெருஞ்சுடரே
இனி நீ பூமியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மாற்றம் எனும் முன்னேற்றம் காண ஏற்றங்களாய் இருக்க வேண்டும்...பெண்ணாக பிறந்ததற்கு பெண்ணே கர்வம்கொள்......