வலி-8

610 47 159
                                    

 

     "    நிலா வோட ஃபோன் ல இருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் போயிருக்கு ஆனா கால அட்டன்ட் ஆகல", என குரு கூறினான்.

"ஒரே நிமிஷம் குரு நா சொல்ற நம்பர நோட் பன்னு நம ஷாப்குள்ள வந்த உடனே இந்த கால் வந்துச்சு 
ஓகே நோட் பன்னிக்கோ ... 9080*****4
"என விஜய் பதில் கூறினான்

"ஹேய் மச்சி இதுதா நிலா வோட நம்பர்....

இது ரொம்ப சீரியஸா போது விஜய் நீ நேர்ல வா " , என வைத்தான் குரு

குழப்பத்தில் இவன் தலை வெடித்தது
பிறகு மேல் நிமிர்ந்து தன்னவளை பார்த்தான். தன்னிலை மறந்து மயங்கி போனான்.

"எனி ப்ராப் விஜய்? ",என்றாள் அவள்

"நத்திங் காது❤ நம வீட்டுக்கு போலாம்" ,என எழுந்து நடையை கட்ட தன்னை தோளில் தட்டி ஒரு கை நிருத்தியது.

"அட அதா சொல்றேன்ல மா ஒன்னுமில்லனு வா போலாம் ", என கூறிக்கொண்டே திரும்பினான்.

பெக்க பெக்க என முழித்துக்கொண்டு "ஐய்யா பில் ...." , என்றான் சர்வர்

("ஏண்டா ஆளு முன்னாடி மானத்த வாங்குற " ) அவன் மௌனமாக பணத்தை கொடுத்துவிட்டு தன்னவளை பார்த்தாள்...
அவள் தன் இதழை கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்ததை ரசித்தான்.

("ஐயோ நிருத்து.....
அத நா தான் கடிப்பே நீ கடிக்க கூடாது ❤❤❤ "என நினைத்துக்கொண்டே )
"என்ன ?" ,என அவளை நோக்கி கேட்டான்.

அவள் நாக்கு எட்டிப்பாரத்து உதட்டை ரிபேர் செய்து உள்ளே சென்றது .
"எதுமில்ல விஜய் போலாம் ",என்றாள் அவள்.

பைக் கிழம்பியது குருவையும் நிலாவையும் மறந்தே போனான்...

தன்னவளின் அந்த அடக்கப் பட்ட சிரிப்பின் அழகை இவன் இன்னும் ரசித்து முடிக்கவில்லை போலும்.......

கனவுலகில இவன் மிதக்க கன்டைனர் குறுக்கே திடீரென வந்தது ....





சடார்ர்ர்ன்.... என ப்ரேக்க்க சத்த்த்தம் காதை கிழிக்க ஸ்கிட் ஆகி பைக் நின்றது .....

காதம்பரியின் காதல்வலி (Completed)Where stories live. Discover now