வலி -9

253 25 53
                                    

காதுவின் வீட்டிற்கு இரவில் வந்து இறங்கினர்.....

"சாப்ட்டு போலாமே?",என இறங்க இறங்க அவள் கூற கதவுகள் திறந்து.

பயம் நிறைந்த கண்கள் கண்ணீர் வடிக்க ..."ஏன் மா லேட்டு?", என்றது

"அப்பா கொஞ்சம் வேல இருந்தது அதா லேட்டு . ஹான் அப்பா இவரு தா விஜய் சேதுபதி detective  சொல்லிருக்கேன்ல?"

"ஹா ஆமா சரி வாங்க தம்பி,(என அவனை அழைத்தார்)   நீயும் வாமா..", என அழைத்து அமர வைத்தார் ....

முதலில் சற்று தயங்கிய விஜய் பிறகு அவர் அன்பை ஏற்று வந்தான்.
எளிமையான அந்த வீட்டில் உணவு  உண்டுவிட்டு  விடைபெற இருந்தான்...

சொல்லி வைத்தார்போல் அன்று முகில்கூடி வரம் கொடுக்க தொடங்கியது....

அழகிய மழையாக இருந்தாலும் அளவில் பெரியதாக இருந்தது.....

"அச்சச்சோ இந்த நேரம் பாத்து இப்டி கொட்டுதே ....

விடுங்க தம்பி வந்தது வந்துட்டிங்க
ஒரு நாள் இருந்துட்டு போங்க...", என்றாள் அன்னை

"இல்லம்மா கொறஞ்சதும் கெழம்பறே "

"இப்பதிக்கு கொறையாது தம்பி நீ உள்ள வா dress மாத்திட்டு மேல் ரூம்ல இனிக்கு படுத்து இருந்துட்டு போ ",என அன்பு கட்டளையிட்டார்..

அரை மனதுடன் ஏற்று மேலே சென்றான்.....

நேரம் கடந்தது...

அனைவரும் உறங்கச்சென்றனர்....

விஜய் அந்த அறையில் அமர்ந்து ஏதோ சிந்தித்து கொண்டிருந்தான்....

ஆனால் உறங்க இயலாது அவன் கண்கள் தவித்தது.....

😢😢"ஐஷு  உன்னோட நா இருக்கும் போது நீ போயிருந்தா நா கஸ்டப்படுவேன்னு என்ட வெலகி இருந்து போய்டயே டா😢😢😢........"

அவள் இல்லாத நிலை இவனை வருத்தி எடுக்க கண்கள் கண்ணீர் சிந்தியது ......
துயரம் அதிகமாக இவன் அழுதுத்கொண்டே உறங்கினான்.....






"விஜய்  காலத்தோட கட்டளை டா என்னால உன் கூட இருக்க முடில ",என அழுதாள் ஐஷூ

காதம்பரியின் காதல்வலி (Completed)Onde histórias criam vida. Descubra agora