மூவரும் நிலாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கே ஓர் வாகனத்தில் மூவர் வந்து இறங்கியதை கண்டு கணேஷ்(நிலாவின் அப்பா) சற்று பயந்தான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் "யாரது ",என்றான்.
பிறகு ஏற்கனவே குரு விசரித்ததால், குருவை அறிந்திருந்தான் "ஓஹ் போலீஸா எத்தனை தரவ பா விசாரிப்பெங்க அதா எனக்கு என் பொண்ணு எங்கன்னு தெரியல னு சொல்றேன்ல . மறுபிடியு மறுபிடியு வந்து இப்டி தொல்லை கொடுத்தா கஷ்டமா இற்கு புரிஞ்சிக்கோங்க பா",என்றான்
ஆத்திரத்தில் குரு "யோவ்" ,என்று கத்தினான்.
"என்ன யோவ் ஆ , அடிங் யார் வீட்டுக்கு வந்து யார குரல் உசத்தி பேசுற? "என கணேஷ் மிரட்டினான்.
"ஆமா டா பெத்த பொண்ண அவளுக்கு பிடிச்ச பையண்ட இருந்து சாதி அது இதுன்னு சொல்லி பிரிக்க கேவலமா உயிரை கொலை செய்ய துணிஞ்ச உன்னலா எப்படி டா மரியாதை கொடுக்க சொல்ற?", என colarஐ பிடித்துவிட்டான் குரு.
"யோவ் என்னடா ஒளருற மரியாதையா கையா எடு"
"Mr. Ganesh manishoda போன்ல மனிஷ் கைரேகை மட்டுமில்லாம உங்க கை ரேகையும் இருக்கு சோ மனிஷ் கொலைக்கு நீங்க தா காரணம்னு எங்கள்ட ஆதாரம் இருக்கு" ,என்றாள் காது.
" ரேகை இருந்தா நா தா கொலை பண்ணேன்னு அர்த்தமா என்ன பேசிட்டு இருக்கீங்க ? மொதல்ல வெளிய போங்க இல்ல நா வெளிய தொரத்த வேண்டி இருக்கும்", என மிரட்டினான்.
(திபு திபு என ஒரு படை வந்து இறங்கியது )
"இவங்க உன் வீட்டை செக் பண்ண வந்துருக்காங்க . இப்ப வீடு எங்க control நீங்க உக்காருங்க", என்றான் விஜய் வில்லத்தனமா சிரித்துக்கொன்டே.
வெறுப்புடன் அமர்ந்தான் ....
"என்ன மயி**கு டா சாதி அது இதுன்னு உயிரை கொல்ல மனசாட்சியே இல்லாம இறங்குறீங்க.
நீங்களும் அவங்க திங்கிற மாரி சோத்தை தான டா திங்கிற ?இல்ல நீ ஏதும் பண்ணிப் பீ ய திங்குறையா?",என விஜய் கொந்தளிக்க காது கையை பிடித்தாள்.
மேலும் அவனை அசிங்கமாக கேக்க முடியாமல் வெறுப்பு பார்வையால் அவனை விழுங்கினான் விஜய்.
YOU ARE READING
காதம்பரியின் காதல்வலி (Completed)
Short Storyenoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu