Episode 19

417 7 2
                                    

அன்று மாலை 6 PM.

புவி பாட்டியுடன் சமையல் அறையில் ஏதோ பேசி கொண்டிருந்தான்.

ஆதிக்கு பரணியிடம் இருந்து கால் வந்தது.

"மச்சா, அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணியாச்சு!"

"சூப்பர் மச்சி!"

ஆதிக்கு, புவி பரணியை பற்றி கூறியவை மனசில் நிழலாடின.

"இங்க ஒரே bore மச்சி. நீயும் வந்திருக்கலாம்!"

பரணி எப்போது ஊருக்கு சென்றாலும் சொல்லும் வார்த்தைகள் இவை.

"டேய்! என்னடா இது? இந்த சமயத்தில நான் எப்படி உன் வீட்ல தங்க முடியும்? அதுவும், அம்மாவுக்கு கண் ஆபரேஷன் நடக்கும் போது? Bore, boreனு சொல்லாத. அம்மாவை நீ தானே பார்த்துக்கணும்!"

"அவங்களை பாத்துக்க ஊர்ல இருந்து சித்தி ஒரு வேலையாளை அனுப்பி இருக்காங்க.. அதோட அம்மாவுக்கு Right eyeல தான் மாஸ்க் போட்டு இருக்காங்க. அம்மா பாட்டுக்கு எப்போதும் போல தான் இருக்கு. நான் என்ன ஹெல்ப்புன்னு எனக்கே புரியல"

"டேய்.. வீட்டுல உன்னை சமையல் பண்ண சொல்லல! கூட ஒரு மாரல் சப்போர்ட்டா இரு!!! அடுத்த செக்கப்புக்கு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ!"

"சரி லெக்ச்சர் அடிக்காத! நீ என்ன பண்ணிட்டு இருக்க. கெழவி வந்து சமைக்குதா?"

"வர்றாங்க.. ம்ம்.. மச்சி உன் கிட்ட ஒன்னு கேப்பேன்.. நீ டென்ஷன் ஆக கூடாது! "

"சொல்லு மச்சி"

"புவியை.. நீ அவனுக்கு தெரியாம வீடியோ எடுத்து, ப்ளாக்மெயில் பண்ணி, அவனை போர்ஸ் பண்ணி செஞ்சியா?"

சில நொடிகள் மறுமுனையில் சைலென்ஸ்.

ஆதி, "பரணி! என்னடா ஒன்னும் பேசாம இருக்க?"

"நீ என்னை டென்ஷன் ஆக கூடாதுன்னு சொன்ன இல்லை? அதான்.. டென்ஷனை அடக்கிட்டு இருக்கேன்!"

"மச்சி!.. "

"என்ன கேள்வி இது? நான் என்ன அப்படிப்பட்ட ஆளா? என் கூட இத்தனை வருஷம் பழகியும், ஏன் இப்படி ஒரு கேள்வி?"

தள்ளி போகாதே (Don't Leave Me Dear!) Where stories live. Discover now