சிறிது நேரம் நடந்து சென்று கால் பந்தாட்ட மைதானத்தில், வெறிச்சோடியிருந்த பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து கொண்ட ஆதி, அமைதியாக எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்தான்.
அருகில் அமர்ந்து கொண்ட புவி, மனம் முழுதும் பதட்டத்துடன் ஆதியை பார்த்தபடி இருந்தான்.
ஆதியே அமைதியை கலைத்தான்.
"புவி! இந்த prank ஏன் தான் பண்ணினேனோன்னு ரொம்ப feel பண்றேன். நேத்து நடந்தது, நடக்காம போயிருந்தா... நீயும் நானும் எப்போதும் போல சகஜமா இருந்திருப்போமே. இப்ப எல்லாமே மாறி போச்சு. நம்ம ரெண்டு பேர் ரிலேஷனே வேறயா மாறிடுச்சு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என்னால உன் கூட பழைய மாதிரி பழக முடியும்னு தோனலை"
புவியின் மனது பதறியது.
"ஆதி! என்னடா இப்படி சொல்ற? என்னோட காதலை ஏத்துக்க வேண்டாம், குறைஞ்ச பட்சம் ஒரு நண்பனா கூட உன் கூட இருக்க முடியாதா?"
"புவி.. நான் உன்னை குறை சொல்லல. நைட் முழுசும் யோசிச்சு பார்த்தேன். எனக்கும் ஒன்னு புரிஞ்சுது. உனக்கு இருக்க feelings.. எனக்கும் உன் மேல இருக்குது. எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நீ என்கிட்டே லவ் ப்ரொபோஸ் பண்ணினது, எனக்குள்ள ஆழ் மனசுல இருந்த காதலை வெளியே கொண்டு வந்திருச்சு. அதுக்கு காரணம்.. உன்னோட கள்ளம் கபடமில்லாத குணம் தான். என்னோட துணியெல்லாம் நீ மடிச்சு வக்கிறப்ப நான் நெனக்கல. இப்ப தெரியுது நீ என்னை உன் மனசுல உயரத்துல வச்சிருக்கன்னு. என்னை நீ உயிரா நெனக்கிறன்னு தெரிஞ்சு என் உயிர் கலங்கிடுச்சு. உன் மேல எனக்கு காதல் ரொம்ப வருஷமா இருந்திருக்கணும்.. நான் அதை உணராம இருந்திருக்கேன்.. அல்லது என்னோட உணர்வுகளை முடி போட்டு மூடி வச்சிருந்திருக்கேன். உனக்கும் எனக்கும் அவ்வளவு தான் வித்தியாசம்"
புவி அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்க வில்லை. சந்தோஷம் மின்னலாய் உடலை தாக்கியது.
"ஆதி! என்னால நம்ப முடியில.. எனக்கு இருக்க உணர்வுகள் உனக்கும் இருக்குங்கிறது நம்ம காதல் புனிதமானதுன்னு காட்டுது. இதை விட எனக்கு சந்தோஷமான செய்தி உலகத்திலேயே இருக்க முடியாது"
JE LEEST
தள்ளி போகாதே (Don't Leave Me Dear!)
TienerfictieBhuvi has a crush for long time on his estranged cousin. He joins the same college and gets admitted to same hostel room. All seemed to be going well for him but? Read this full story with lot of twists and turns. Pure gay story with erotic scenes...