Episode 24

782 7 13
                                    

புவி, "நான் முதல்ல பேசறேன்னு சொன்னதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு! என்னோட முடிவை, என்னோட மனசுல இருக்க விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டா, உங்க முடிவுகளை நீங்க ஈஸியா எடுத்துக்கலாம்ன்னு தோணுச்சு.. நான் என்ன நினைப்பேனோ.. நான் என்ன முடிவு எடுப்பேனோன்னு.. நீங்க தப்பான முடிவு எடுத்திட கூடாது"


புவியின் வார்த்தைகளில் இருந்த சீரியஸ்னெஸ் ஆதியையும் பரணியையும் பற்றிக்கொண்டது.

"ஆதி.. ரொம்ப நாளா நான், உன் கிட்ட எப்படி பரணி பண்ற விஷயத்தையெல்லாம் சொல்லி, புரிய வைக்கிறது... என்னை பத்தி தப்பா நெனச்சுட்டு இருக்க உன் கிட்ட, எப்படி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன். இப்ப அதையெல்லாம் நான் செஞ்சும் எனக்கு எந்த சந்தோஷமோ திருப்தியோ இல்லை.. நானும் யோசிச்சு பார்த்தேன். அதுக்கு காரணம் என் மனம் வேற நிலைக்கு போனது தான்.."

"என்னடா சொல்ற?" ஆதி பதறினான்.

"ஆமாம் ஆதி.. நீ என்னை பிரிஞ்ச சமயத்தில.. உன் கிட்ட உண்மையை நிரூபிச்சு, உன்னோட மறுபடி சேரணும்னு ரொம்ப துடிச்சேன்! ஆனா, இப்ப.. எனக்கு உன்னோட சேருறது மட்டுமே என்னோட வாழ்க்கையின் குறிக்கோள் இல்லைன்னு தோணுது! நான் படிக்கணும். நல்ல வேலைக்கு போகணும். அப்பாவை அம்மாவை கடன் பிரச்சனைகளில் இருந்து கரை சேக்கணும். இப்படி நிறைய.. என்னோட தனிமை சொல்லிக்கொடுத்த பாடம் இது ஆதி! "


"மச்சான்..!!!" 

ஆதிக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வர தடுமாறின.

புவி தொடர்ந்தான்.

"ஒரு வெள்ளந்தியா கிராமத்திலேந்து வந்த எனக்கு, எல்லாமே நீ தான்னு இருந்தேன். ஒரு பலகீனத்துல நான் பரணியோட வலையில விழுந்தேன். நீ என்னை காதலிக்கறேன்னு சொன்னது என்னை மாத்திருச்சு. உன்னை என்னோட கணவனா, நான் உன்னோட மனைவியா நினைச்சு, என் வாழ்க்கையே உனக்கு உண்மையா இருக்கிறது தான்னு இருந்தேன்.

அப்படி ஒரு கமிட்டடா இருந்த என்னை, பரணி பழைய வீடியோவை காட்டி, மிரட்டி, என்னை, என் காதலை களங்கப்படுத்தினான்.

என்னை நம்ப வேண்டிய நீயே.. என்னை எதிரியா பார்த்த...

எனக்கு ஆறுதல் சொல்லவேண்டிய நீ, என்னை வார்த்தையால கொன்ன...

என் கூட இருந்து என்னை பாதுகாக்க வேண்டிய நீ, சொல்லாம ரூமை விட்டு போயிட்ட. பிணம் தின்னி கழுகு, ஓநாய்களுக்கு நடுவில என்னை தவிக்க விட்டுட்டு போயிட்ட.

என் ரூம் வாசலில் அயிட்டம், கையடிச்சு விட அஞ்சு ரூபா, வாய் போட பத்து ரூபாய்ன்னு எழுதி ஓட்டிட்டாங்க!"

புவிக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

ஆதி அதிர்ந்தான். ஆதியின் கண்கள் சிவந்தன. புவி மறுபடியும் தொடர்ந்தான்.

"அந்த ஒட்டு மொத்த ஹாஸ்டலுக்கு முன்னாடி, நான் பட்ட அவமானம், அசிங்கம்.. வார்த்தையால சொல்ல முடியாது.

அந்த சூழ்நிலையில நீயோ உன் ஆறுதலோ இல்லாததால எனக்கு வாழ்க்கையே மாறி போயிடுச்சு! ஆனாலும் கஷ்டத்துல ஒரு நல்ல விஷயமா, நான் சுயமா என்னோட பிரச்சனைகளை நானே தீர்க்க எனக்கு அந்த சூழ்நிலை உதவிச்சு. என்னோட தன்னம்பிக்கையும் என்னோட உறுதியும் அதிகமா ஆயிடுச்சு. "

ஆதி இடைமறித்து பேச ஆரம்பித்தான்.

"மச்சான்.. நான் நொந்து போயிருக்கேன். என்னோட காயத்துல உப்பை தூவாத, ப்ளீஸ்"

புவி இடைமறித்து,

"ஆதி! உன் மேல பழி போட நான் இதை சொல்லலை. என்னோட வாழ்க்கை இந்த ஆறு மாசமா திசை மாறிடுச்சு. எனக்கும் வாழ்க்கையோட பல சவால்களை வெளிச்சம் போட்டு காட்டுச்சு. என்னோட முடிவுக்கு பின்னாடி இருக்க காரண காரணிகளை உனக்கு சொல்றேன். உன்னை பழி சொல்லல. சொல்லவும் மாட்டேன்"

"நான் பண்ணினது தப்பு தான். ஆனா சத்தியமா நான் உன்னை வெறுக்கலை. உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பினதே இல்லை. அந்த சூழ்நிலையில.. நான் பரணியும் அப்பாவும் சொன்னத நம்பினேன். அது தப்புன்னு இப்ப புரியுது. ஆனா அப்ப அது தெரியல. புரிஞ்சுக்கோ மச்சான்"

"புரியுது ஆதி... அது தான் என்னோட வேதனையே! எனக்குன்னு இருக்க ஒருத்தன் என்னை நம்பலைங்கறது தான்"

"மச்சான்! நான் உன்னை முழுசா நம்பறேன்டா. நாம பழசை மறந்து, நம்ம வாழ்க்கையை புதுசா ஆரம்பிபோம்"

புவி வேதனையாக சிரித்தான்.

"சரி, நாம மறுபடி ஒண்ணா காதலர்களாகலாம். ஒன்னா தங்கலாம். உங்க அப்பா ஒத்துப்பாரா? தன்னோட ஒரே மகன் தன் பேச்சை மீறி, ஒரு ஹோமோ கூட தங்க ஒத்துப்பாரா?"

"என்னடா எது சொன்னாலும் அதுக்கு ஒரு முட்டுக்கட்டையான பதில் சொல்ற! நாம நெனச்சா ஒண்ணா இருக்க முடியாதா? என்னோட feelings உனக்கு புரியலையா? "

"ஆதி! நான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கலை. உன் மேல பாசமோ அன்போ இல்லாம தான் நான், நீ கைகூப்பிட்ட உடனே இங்க வந்து உன் கூட தங்கினேனா? உன்னை நான் நேசிக்கிறேன். உன்னை வெறுத்தா, என்னையே நான் வெறுத்திடுவேன். நடந்த பிரச்சனைகளுக்கு நானும் நீயும் தான் பொறுப்பு. சரி சம பொறுப்பு! நம்ம காதல்ல ஆசை இருந்தது, அவசரம் இருந்தது. ஆனா முதிர்ச்சி இல்லை. இப்போ அது தான் தேவை. இன்னும் சில காலம் நாம தனித்தனியா பிரிஞ்சு இருப்போம். நமக்குள்ள உண்டான இடைவெளியை காலம் தீர்த்து வைக்கும். உடலும் மனசும் இன்னும் வலு பெரும். அப்போ நீயும் நானும் இதே காதலோடு இருந்தா கண்டிப்பா சேருவோம்"

"என்னடா, ஏதோ பெரிய அறிஞன் மாறி பேசுற? நீ சொல்றது சரி வருமா?"

"சரி வரணுங்கிறது என் ஆசை. அதுதான் உன் ஆசையும் இல்லை? கொஞ்ச நாள் அந்த ஹாஸ்டல்ல தனியே இருந்தா, நான் சாக்ரடீஸா மாறிடுவேன் மச்சான்!"

"அப்ப நீ கிளம்பத்தான் போற?"

"டேய்! இங்க பக்கத்துல இருக்க ஹாஸ்ட்டல்ல தான் இருக்க போறேன்! அப்பறம் நாம ரெண்டு பேருமே ஒரே காலேஜ் தான், ஞபாகம் வச்சுக்கோ!! நாம நெனச்சாா, எப்ப வேணும்னாலும் மீட் பண்ணலாம், பேசலாம். அந்தளவு நெருக்கம் இப்போதைக்கு போதும்!"

ஆதி புவியை கட்டி தழுவி முத்தமிட்டான்.

"என்னை மன்னிச்சிரு மச்சான்!"

"என்னையும் நீ மன்னிச்சிரு மச்சான்!"

புவி எழுந்து கொண்டு, "பரணி .. உன் போனை நான் format பண்ணிட்டேன். சாரி! அது தான் safeனு தோணுச்சு. ஒரு கிராமத்தானை எப்படி எல்லாம் யோசிக்க வச்சுட்ட இல்லை பரணி? அந்த பெருமை உனக்கு தான்!"

பரணி எதுவும் பேசாமல் புவியை உற்று நோக்கினான்.

புவி தொடர்ந்து, "பரணி! நீ ஒரு நல்ல மனோதத்துவ டாக்டரை பாரு. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்!" என்று பரணியிடம் கூறிவிட்டு,

ஆதியை நோக்கி, "ஆதி! இந்த சூழ்நிலையில உன்னை விட்டுட்டு போறது எனக்கு கஷ்டமா இருக்கு. ஆனா, பரணி உன்னை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கை இருக்கு.
உனக்கு கட்டு பிரிச்ச உடனே அவனையும் ஒரு psychiatrist கிட்ட கூட்டிட்டு போய் காமி... ஆதி... மச்சான்.. வரேண்டா.. உடம்பை பாத்துக்கோ..!" என்ற போது அவன் குரல் கம்மியது.

உடைந்த குரலில் பரணி ஆதியிடம், "மச்சா .. உன்னை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன். என் மேல கோபமா மட்டும் இருக்காத.. என்னால தாங்க முடியாது ப்ளீஸ்! " என சொல்ல, அவன் குரல் பிசிறடித்தது.

பரணியை பார்த்தால் ஆதிக்கு பரிதாபமாக இருந்தது. கனிவாக அவனை பார்த்து விட்டு, "உன்னையும் நான் நல்லா பாத்துக்கிறேன்.. மச்சா!" என்றான்.

பரணியின் கண்கள் சிவக்க, வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

ஆதி புவியிடம், 'போயிட்டு வா மச்சான்...  வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு.. மச்சான்! " என மிகுந்த வேதனையோடு சொன்னான்.

புவி லக்கேஜுகளை எடுத்து கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தான்.

பாட்டி சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்து விட்டாள்.

"பாட்டி.. நான் கிளம்பறேன். உங்க கையால இன்னும் கொஞ்ச நாள் சாப்பிட முடியல. உங்களை என்னால மறக்க முடியாது. பாக்க எங்க அப்பத்தா மாறியே இருக்கீங்க!"

"ஏன்யா போற? உன்னை மாறி அந்த புள்ளைய யார் கவனிச்சுப்பா? பாவம் கண்ணு ஆதி!"

"பரணி வந்துட்டாப்புள்ள..அவர் கவனிச்சுப்பார் பாட்டி. நான் தற்காலிகமா தான் தங்க வந்தேன் பாட்டி! அதான் பரணி வந்த உடனே நடுவுலயே கிளம்பிட்டேன்.. "

"நடுவில போற உறவா கண்ணு உங்க உறவு? கடைசி வரைக்கும் இருக்கிற உறவுய்யா.. "

புவிக்கு கண் கலங்கியது.

பாட்டியும் புவியும் பேசியவை ஆதி நெஞ்சை பஞ்சாக்கின.

ஆதிக்கு எழுந்து சென்று புவியை தடுத்து, அணைத்து, தன்னோடு வைத்து கொள்ள நெஞ்சு துடித்தது, முடியாமல் தவித்தான்.

புவி உதட்டை கடித்து, உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, உண்டான அழுகையை வாய்க்குள் அடக்கி கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.

ஆட்டோ பிடித்து பேருந்து நிலையத்தை அடைந்த புவி, திருச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்தான். அவன் போன் அடிக்க, எடுத்து பார்த்தான்.

'அருண்'

"புவி! நான் கொஞ்ச நாள் கழிச்சு கோவைல வீடு எடுத்து தங்க போறேன். என் கூட தங்க விருப்பம்னா வா.. உனக்கு ஹாஸ்டல்ல இருக்க problems எனக்கு தெரியும். அதனால தான் கூப்பிடுறேன். ஒரு நண்பனா தான்... வேற எந்த உள்நோக்கமும் இல்லை! No strings attached"

புவி அதை எதிர்பார்த்திருக்க வில்லை.

"சீனியர் .. ரொம்ப தேங்க்ஸ்! இந்த ஹாஸ்டல்ல தைரியமா இருக்க என்னை தயார் பண்ணினதே நீங்க தானே? அதோட ராகேஷும் இந்த வருஷம் ஹாஸ்டல்ல இருக்க மாட்டான். நான் யோசிச்சு சொல்றேன்!"

"ஓகே. நீ எப்போ வேணும்னாலும் கால் பண்ணு! This Offer is valid for you with no expiry date, ok? Bye! "

"ஓகே சீனியர், பை! Thanks"

எப்போதும் இல்லாத தெளிவும், எதிர்காலத்தை குறித்து உண்டான நம்பிக்கையும், புவிக்கு புத்துணர்வை கொடுத்தது.

பேருந்து வேகமெடுத்தது.

தள்ளி போகாதே (Don't Leave Me Dear!) Where stories live. Discover now