புவிக்கு, 'கதவை தாழ் போட்டு விட்டு தானே வந்தேன்..? எப்படி அது திறந்து இருந்தது? பரணியோட சதி வேலையா இது? நான் பாத்ரூம் போனப்ப நைஸா திறந்து வச்சுட்டானா? ஐயோ கடவுளே!' என பீதி பற்றிக்கொண்டது.
பரணி, "மச்சான்.. நான் சொல்றதை நீ பொறுமையா கேக்கணும்! எல்லாத்தையும் ஒழிவு மறைவு இல்லாம ஓப்பனா சொல்றேன்!" என்ற பீடிகையோடு ஆரம்பித்தான்.
"ஆதி.. நாம எவ்வளோ நாளா பழகுறோம்? இதுவரைக்கும் எந்த பிரச்னையாவது வந்திருக்கா? அதை விடு.. இவன் வரதுக்கு முன்னாடி இதே ஹாஸ்டல்ல ஒரு வருஷம் ஒண்ணா இருந்திருக்கோம்? நல்லாத்தானே இருந்தோம்! இங்க நடக்குற பிரச்னைகளுக்கு காரணமே இந்த புவி தான். அதை முதல்ல சொல்லியாகணும்!" என்றான் பரணி.
புவி, "டேய்!!! சைக்கோ!!! அபாண்டமா பேசாத!" என பதறினான்.
ஆதி, "அவன் பேசி முடிக்கட்டும்! அப்பறம் நீயும் பேசலாம்!" என குரலை உயர்த்தி சொல்ல, புவி வாயை மூடிக்கொண்டான்.
பரணி தொடர்ந்தான்.
"மச்சான், நீ வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறவன்! நல்லவன் கெட்டவன் உனக்கு தெரியாது! உன் மனசு அப்படி... இந்த பய வந்தபோதே எனக்கு தெரிஞ்சு போச்சு, இவன் 'கே' ன்னு. ஒரு தடவை இல்ல, ரெண்டு தடவை இல்லை, பல தடவ.. என்னை தவறான முறையில தொட்டான். என் நெஞ்சை கிள்ளுறது.. தூங்குறப்ப குஞ்சை பிடிச்சு உருவுறது.. வாயில வைக்கிறதுன்னு.. நெறைய தொல்லை பண்ணிருக்கான்.. சொல்லவே எனக்கே கூச்சமா இருக்கு!"
புவியின் கண்களில் கண்ணீர். மனசோ துரோகத்தீயில் வாடியது. அவனால் இதெல்லாம் உண்மையில் நடக்கிறதென்றே நம்ப முடியவில்லை. காதுகள் வலித்தன.
"ஒரு கட்டத்துல அவன் மேல எனக்கு அப்படி ஒரு வெறுப்பு... 'முடியாது' ன்னு சொல்லிட்டேன். அப்ப தான் உன்னை ட்ரை பண்ண போறதா சொன்னான். எனக்கு ஷாக்!!!
'வேனாம்! அவன் உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கான்! நீ அப்படி செஞ்சா, ஆதி ரொம்ப வருத்தப்படுவான்.. விட்ரு' ன்னு நிறைய சொல்லி பார்த்தேன். கேட்கவே இல்லை. 'நீ வா, இல்லை.. ஆதி வேணும்னு!' சொல்லிட்டான்.
ஒரு பக்கம், அவன் உன் சொந்தக்காரன்.. தாய் மாமா பையன்.. ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி அவனோட நீ பேசுற, ஒண்ணா இருக்க... அதை நான் கெடுக்க விரும்பல.! மறு பக்கம், புவி அந்த கெமிக்கல் இன்ஜினியரிங் பில்டிங் போறான்னு கேள்வி பட்டேன். Shock!!!"
பரணியின் ஒவ்வொரு வார்த்தையும் இடியாய் புவியின் நெஞ்சில் இறங்கியது. மயக்கம் வராத குறை தான்.
ஆதியின் பார்வை புவியை ஈட்டியாக குத்தி கிழித்தது.
"நானும் எவ்வளவோ தடுத்தேன்! முடியில!!! சின்ன பையன்.. அவனால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியிலன்னு நெனச்சேன். நான் 'முடியாது'ன்னு சொன்னதால தான், அவன் புதுப்புது ஆளுங்களை தேடி பழைய கெமிக்கல் இன்ஜினியரிங் ப்ளாக் போறான்னு.. எனக்கு குற்ற உணர்ச்சி.
கடைசில ஒரு நாள்.. நான் வீக்கா இருக்க நேரத்துல என்னை ஊம்பிட்டான். இப்படி சில நாட்கள்... அப்பறம் கொஞ்ச நாள் இல்லாம இருந்துச்சு. நீ ஊருக்கு போன அடுத்த நாள் என்னை ரொம்ப வலுக்கட்டாய படுத்தி blow பண்ணினான்..
இப்ப கூட அதான் நடந்தது. அவனுக்கு செக்ஸ் தான் வேணும். இடம் பொருள் ஏவல் எதுவும் இல்லை. ஒரு செக்ஸ் மேனியாக்கா மாறிட்டான் மச்சான்.. ஐ ஆம் சாரி.
அவன் ஒரு விஷம் ஆதி.. அவன் கிட்ட ட்ரூத் இல்லை ட்ரஸ்ட் இல்லை... Friendship இல்லை! அவன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்த, எனக்கு வேற வழி தெரியல. But one thing for sure Aadhi. You don't deserve this!"
பரணியின் கண்கள் சிவந்து கலங்கிப்போய் இருந்தது.
புவிக்கு மூச்சு வாங்கியது. உடல் உஷ்ணமாகி காய்ச்சல் வந்தது போல இருந்தது. திடீரென்று உடல் பலகீனமாக ஆனது போல இருந்தது அவனுக்கு.
புவி அலறினான்.
"இல்லை.. இல்லை...!!!! அத்தனையும் பொய்.! இவனை நம்பாதடா ஆதி!"
ஆதி, "புவி, நீ சொல்ல வந்ததை சொல்லு! " என்றான்.
"என்ன சொல்றது ஆதி.. பச்சை துரோகம்.. பரணி என்னை ஒரு friendஆ கூட நினைக்க வேணாம்.. ஒரு roommateஆ கூட நினைக்க வேண்டாம். அவன் ஒரு மனுஷனா கூட என்னை மதிக்கலை!!! "
கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி தொடர்ந்தான் புவி.
"எனக்கே என்னை பத்தி தெரியல ஆதி. இங்க வந்த பிறகு என்னோட ஈர்ப்பு என்னன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சுது. இவன் என்னை ஆயிரம் தடவை 'கே'ன்னு சொல்லிருப்பான்!
ஆமாம்! நான் 'கே' தான்!!! நான் யாரைமும் ஏமாத்தலையே? யாரையும் ப்ளாக்மெயில் பண்ணலையே? யாரையும் கெட்டவார்த்தை சொல்லி வையலியே?
ஏதோ ஒரு சூழ்நிலையில, என்னோட உணர்ச்சி வேகத்துல, பரணியோட செக்ஸ் வச்சிக்கிட்டேன். அது அவனும் இஷ்டப்பட்டு, இன்னும் சொல்லப்போனா அவன் தூண்டி தான் அந்த நிகழ்வே நடந்துச்சு. அதை அவன் வீடீயோ பிடிச்சு என்னை மிரட்டித்தான், ரெண்டு நாளா என்னை டார்ச்சர் பண்ணி, என்னை பணிய வச்சான் ஆதி!!! அவன் சொல்ற மாதிரி நான் மேனியாக்கோ இல்லை! தப்பானவனோ இல்லை!!!"
பரணி, "புவி! எனக்கு எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. நேத்து நடந்து கூட என்னோட போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கு. போட்டு காட்டட்டுமா? அது சொல்லிடும் உன் திருட்டுத்தனத்தை!"
ஆதி, "ஸ்டாப் இட் பரணி!! என்ன இது? வீடியோ அது இதுன்னு!!! எதுக்கு அதெல்லாம் ரெக்கார்ட் பண்ணி இருக்க?? தப்பு! நீ டெலீட் பண்ணு!"
"இல்ல ஆதி.. இவனோட சுயரூபத்தை உனக்கு காட்ட தான் அதை ரெக்கார்ட் பண்ணினேன். பாரேன்! "
"நான் அதை பாக்க மாட்டேன்.. நீ அதை முதல்ல டெலீட் பண்ணு! "
பரணி ஒன்றும் பேசாமல் போனை நோண்டி விட்டு,
"மச்சான்! டெலீட்டட் டா! ", என்றான்.
புவியின் விசும்பல் தொடர்ந்தபடி இருந்தது. அவன் உடல் ஒவ்வொரு விசும்பலின் போதும் குலுங்கி அதிர்ந்ததது.
ஆதி, "பரணி! நீ கொஞ்சம் வெளியே போய்ட்டு வா.. நான் புவியோட கொஞ்சம் தனியா பேசணும்!" என்றான்.
பரணி மொபைல் போனை எடுத்து கொண்டு வெளியேறினான்.
ஆதி கதவை சாத்திவிட்டு வந்தான்.
அவன் கண்களில் ஒரு கோபம், வேதனை, அவமானம், ஏமாற்றம், என எல்லாமே குழைந்து இருந்தது.
"புவி! உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாத்தையும் இப்படி உடைச்சு போட்டுட்டியே. என்னையும் ஒரு சதை பிண்டமா தான் நீ பார்த்தியா? உன் ஆசைகளை தணிச்சுக்கிற உடம்பாத்தான் என்னை சேர்ந்தியா?"
"ஆதி.. என் அப்பா மேல சத்தியமா, நான் அப்படி நெனக்கல!!! என்னோட உயிராத்தான் உன்னை நெனக்கிறேன்"
ஆதி, "அப்படி நெனச்சவன்?!.. என்கிட்டே உண்மையா இல்லாம இருந்தா எப்படி?? நான் அன்னிக்கு உன்கிட்ட என்ன கேட்டேன்? 'உனக்கு ஏற்கனவே செக்ஸ் அனுபவம் இருக்கான்னு'? சொல்லிருக்கலாமே!!! பரணியோடன்னு சொல்லிருக்கலாமே?
"ஆதி.. அவன் மேல நீ ரொம்ப நம்பிக்கை வச்சிருந்த! அதை நான் கெடுக்க விரும்பல!"
"என்னடா இது? அவனை கேட்டா, புவி மேல நான் வச்சிருந்த நம்பிக்கையை நெனச்சு சகிச்சுக்கிட்டேன்னு சொல்றேன்! நீயும் அதே காரணத்தை சொல்ற! ஆனா ரெண்டு பேருமே, என் நம்பிக்கையை பொய்யாக்கிட்டீங்க"
"என்னை மன்னிச்சிரு, ஆதி"
புவியின் விசும்பல் கதறலாக உருவெடுத்து பெரிதானது.
"இல்லை புவி.. உன்னை என் உயிரா நெனச்சு என் உடம்ப உனக்கு கொடுத்தேன். நீ எனக்கு துரோகம் பண்ணினதை என்னால தாங்க முடியில. என்கிட்டே நீ பொய் சொன்னது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பல பேர் சாப்பிட்ட எச்சி இலையில என்னையும் சாப்பிட வச்சு ஒரு தெரு நாயா ஆக்கிட்ட... ரெண்டையும் என்னால மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இனி நாம ஒண்ணா இருக்கவும் முடியாது. நான் வேற இடம் பாக்குறேன்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
புவிக்கு ஆதியின் வார்த்தைகள் தீயாய் சுட்டன.
'நானா எச்சில் இலை ஆதி???'
மறுபடியும் மறுபடியும் புவியின் உயிரை கொன்றன அந்த வார்த்தைகள்.
ŞİMDİ OKUDUĞUN
தள்ளி போகாதே (Don't Leave Me Dear!)
Genç KurguBhuvi has a crush for long time on his estranged cousin. He joins the same college and gets admitted to same hostel room. All seemed to be going well for him but? Read this full story with lot of twists and turns. Pure gay story with erotic scenes...