1. காதல் போயின் சாதல்?

1.6K 12 0
                                    

இரவு மணி பத்து.

பேருந்து நிலையத்தில் இருந்து கால் டாக்சி ஒன்றை பிடித்து, அன்பு கோவை இன்ஜீனியரிங் கல்லூரியின் விடுதியை அடைந்தான். அங்கு இருந்த வார்டன் அறையில் தொங்கி கொண்டிருந்த பூட்டை தன் பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த சாவியை கொண்டு திறந்து மின்விளக்கையும் மின்விசிறியையும் ஓட விட்டான். அவன் மனசும் உடலும் மிகவும் களைத்து போய் இருந்தன. எப்போதும் இல்லாத அளவுக்கு மனசுக்குள் வெறுமை குடி கொண்டிருந்தது.

அன்பு கதவை உள்புறம் தாழிட்டு விட்டு, லுங்கிக்கு மாறினான்.

இரு வாரம் கழித்து பணிக்கு திரும்பி இருந்தாலும் அவன் மனசு இன்னும் நடந்த விஷயங்களையே நினைத்து கொண்டிருந்தன. சிதைக்கு தீ மூட்டியது இன்னும் மனசை பிசைந்து கொண்டிருந்தது.

‘என் மேல் அன்பு கொள்ள இந்த உலகில் இனி யாருமே இல்லையா?’

துக்கம் தொண்டையை அடைத்தது.

‘இது என்ன வாழ்க்கை.. யாருக்காக இந்த வாழ்க்கை.. ஒரு பிடிப்பும் இல்லை.. என் முகிலன் இல்லை.. என் மேல் அக்கறை கொண்ட ஜீவன்கள் யாரும் இல்லை.. போதும்.. வேண்டாம்..’

அன்புவின் கண்ணோரம் மெல்லிய நீர்த்துளி.

‘சித்ரா பவுர்ணமி சில வாரங்களில் வருகிறது.. என்ன செய்யலாம்.. உலகத்தை விட்டு சென்று விடலாமா?’

அவனுடைய மனசு ரோலர்கோஸ்டர் போல வேகமாக எதிர்மறை எண்ணங்களை நோக்கி சென்ற வண்ணம் இருந்தது.

‘தேவை எல்லாத எண்ணங்கள் வேண்டாம் அன்பு.. நிதானம் தேவை.. அவசரம் வேண்டாம்.. நல்ல விஷயங்களை நினை.. என்று டாக்டர் சொன்னதை மறக்காதே..’ மூளை அவனை எச்சரித்தது.

பழைய நினைவுகள் அவனை தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தன. புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக தூங்கி போனான்.

அதிகாலை தனது அறையின் கதவு பலமாக தட்டப்பட, அன்பு கண்ணை கசக்கி மொபைலை எடுத்து நேரத்தை பார்த்தான். மணி 4.40.

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now