15. சவால்!

321 4 0
                                    

அடுத்த வார கடைசியில் வெள்ளி மாலை அப்பாவும் சித்தப்பாவும் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அப்பா திண்ணையில் இருந்த சேரில் அமர்ந்து ஜூனியர் விகடனை புரட்டி கொண்டிருந்தார். அருகில் சித்தப்பா ஏதோ கணக்கு புத்தகத்தை பார்த்துகொண்டிருந்தார்.

அன்புவை கண்டதும் அப்பா, "என்னடா அன்பு.. எப்படி படிப்பெல்லாம் போகுது.. ?" என கேட்க,

அன்பு, "நல்லா போகுதுப்பா.."

"ஒழுங்கா படிக்கிறியா இல்ல.. எதாவது பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியா?"

அன்புவுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மெளனமாக இருக்க, அம்மா உள்ளிருந்து வந்து,

"என்னங்க, உங்களுக்கு போன்.. தலைவர் உதவியாளர் கூப்பிடறார்.. தலைவர் பேசணுமாம்.."
அப்பா அவசரமாக கிளம்பி உள்ளே சென்றார். அம்மாவும் சென்று விட, சித்தப்பாவை தவர்க்கும் பொருட்டு, அன்பு மெல்ல வீட்டுக்குள் நுழைய முயன்றான்.


அதற்குள் சித்தப்பாவின் குரல் தடுத்தது.

"அன்பு, இங்க வாடா! உன்கிட்ட பேசணும்.."

அன்பு தயக்கமாக அருகில் அமர்ந்தான்.

"என்ன சித்தப்பா?"

"நீ அந்த முகிலனோட அதிகமா சுத்துறதா கேள்வி பட்டேன்.. என்ன விஷயம்?"

"... அவன் என்னோட friend சித்தப்பா.. "


"காலேஜ் கட் அடிச்சிட்டு படத்துக்கெல்லாம் அவனோட போறியாம்.."

"ஒரு தடவை.. போனேன்.."


"நல்லா இல்ல அன்பு.. நம்ம கவுரவத்துக்கு அவனோட சுத்துறது கவுரவம் இல்ல.."

"இதுல எந்த கவுரவ குறைச்சலும் இல்ல.. சித்தப்பா"

"டேய்.. அவனுங்களை பத்தி உனக்கு தெரியாது... விஷ கிருமிங்க"

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ