22. பிரிவின் வலி

270 5 0
                                    

அப்பா ஆறுமுகத்தின் சத்தமான குரல் தடுத்தது.

"சரவணா, நிறுத்துடா!!!"

சித்தப்பா குழப்பமாக பார்க்க,

அப்பா ஆறுமுகம்,

"வேண்டாம் யாரையும் கொல்லாத. இந்த முறை வேண்டாம். எச்சரிச்சு விட்று"

"என்னண்ணன் சொல்ற. இவன் அன்புக்கு பண்ணின வேலைக்கு பொடிபொடியா இவனை வெட்டி கழுகுக்கு காக்கைக்கு போடணும். இனிமே பொறுமையா இருந்தா நமக்கு கேவலம்"

"ப்ச். நான் சொல்றேன்ல. விட்று"

சித்தப்பா சரவணன் நம்ப முடியாமல் திகைத்தான்.

அன்புவுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல இருந்தது. முகிலன் சோர்ந்து போய் கண்கள் பாதியாக மூடி கொண்டிருந்தான்.

சித்தப்பா கோபமாக தீப்பெட்டியை தூர வீசிவிட்டு,

"சண்முகம்! அந்த கருப்பன், அவன் பொண்டாட்டி, பொண்ணை, கட்டை அவுத்துவிட்டு இங்க கூட்டிட்டு வா" என்றான்.

தடுமாறியபடி கருப்பன் ஓடி வந்து சித்தப்பா சரவணன் காலில் விழுந்தான்.

"ஐயா!!! என் புள்ளைய ஒன்னும் பண்ணீடாதீங்க ஐயா. எந்த தப்புனாலும் என்னை கொன்னுடுங்க ஐயா.. "

கருப்பனின் மனைவியும் கதறி அழ அந்த இடமே ஓலங்களால் எதிரொலித்தது.

சித்தப்பா,

"இங்க பாரு எச்ச நாயே.!!! ஒரு நொடி போதும் இந்த தீக்குச்சியை பத்த வச்சா, பொசுங்கிடுவான் உன் மவன்! யார் கிட்ட விளையாண்டு பாக்குறீங்க? வைக்கோல் எரிக்கிற மாதிரி எரிச்சிடுவேன்! சொல்றதை நல்லா கேளு. இனிமே உன் மகன் இந்த ஊர்ல இருந்தான்னா, அவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அவன் மூஞ்சியை, நானோ, என் குடும்பமோ, முக்கியமா அன்புவோ பார்க்க கூடாது. அதே மாறி திண்டுக்கல் பக்கமும் வரக்கூடாது" என்று சொல்லி விட்டு முகிலனை நோக்கி,

"டேய் கொம்மாழ.. முகிலன் புண்டா மவனே, நீ இனிமே ஊருக்கு, திண்டுக்கல்லுக்கு வந்தன்னு,இல்லை, அன்புவோட பேசுண்ணனு கேள்விப்பட்டேன் புடிச்சு கொளுத்திருவேன். தப்பிச்சு ஓடினா, ஒங்கோயி உங்கொப்பன் செத்தாங்கன்னு நெனச்சுக்கோ.

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now