மதியம் உணவு இடைவெளியில் முகிலன்,
"மச்சி, நான் நேரா தியேட்டர்க்கு வந்துடறேன்.. உன்னோட டிக்கெட் இங்க இருக்கு.. நீ நேரா வந்திடு.. யாரவது பார்த்திடுவாங்க.."
"ஏன்டா? யார் பார்த்தா என்ன? நாம சேர்ந்தே போலாம்.."
"இல்லடா.. இங்க காலேஜ் முழுக்க உங்க அப்பா சித்தப்பா ஆளுங்க.. ரெண்டு பேரும் கட் அடிச்சிட்டு போனா பிரச்சனை ஆக வாய்ப்பு இருக்கு.. அதான் சொல்றேன்.."
"டேய்.. அந்த தியேட்டர் கூட எங்க சித்தப்பாவோடது தான்.. அதுக்கு என்ன பண்ண போற"
முகிலன் என்ன சொல்வது என தெரியாமல் தவிப்பதை பார்த்த அன்பு,
"சரி, நீ கிளம்பு, நான் கொஞ்ச நேரத்தில அங்க வந்துடறேன்.."
"சரி மச்சி.. வந்திடு"
முகிலன் வேகமாக வெளியேறினான்.
----
மதியம் உணவு இடைவெளியில் முகிலன்,
"மச்சி, நான் நேரா தியேட்டர்க்கு வந்துடறேன்.. உன்னோட டிக்கெட் இங்க இருக்கு.. நீ நேரா வந்திடு. ..சேந்து போனா யாரவது பார்த்திருவாங்க"
"ஏன்டா? யார் பார்த்தா என்ன? நாம சேர்ந்தே போலாம்.."
"இல்லடா.. இங்க காலேஜ் முழுக்க உங்க அப்பா, சித்தப்பா ஆளுங்க.. ரெண்டு பேரும் கட் அடிச்சிட்டு போனா பிரச்சனை ஆக வாய்ப்பு இருக்கு.. அதான் சொல்றேன்.."
"டேய்.. அந்த தியேட்டர் கூட எங்க சித்தப்பாவோடது தான்.. அதுக்கு என்ன பண்ண போற?"
முகிலன் 'என்ன சொல்வது?' என தெரியாமல் தவிப்பதை பார்த்த அன்பு,
"சரி, நீ கிளம்பு, நான் கொஞ்ச நேரத்தில அங்க வந்துடறேன்.."
"சரி மச்சி.. வந்திடு"
முகிலன் வேகமாக வெளியேறினான்.
----
அன்பு தியேட்டர் ரூமில் நுழைந்த போது அங்கு பாதிக்கும் கம்மியாக கும்பல் இருந்தது. மெல்லிய ஏசி உடலை வருடியது வெயிலுக்கு இதமாக இருந்தது.
கடைசி வரிசையில் முகிலனை கண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தான் அன்பு.
YOU ARE READING
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)
RomanceAnbu, a college lecturer, with a sorrow past of love failure but everything changes because of one phone call. Perhaps will it bring what has been missed in his life - love? Or will it devastate him even more? Read this story full of great moments...