7. உன்னை தேடி வந்தேன்

540 4 0
                                    

முகிலன் தன்னை விட்டு சென்றபோது தன் ஆவி அவனுடன் சென்றது போல இருந்தது அன்புவுக்கு. உடலெங்கும் அப்படி ஒரு சோர்வு. மனசோர்வோ மிக அதிகம். உணவருந்த விருப்பமில்லை. அந்த கோடை விடுமுறை இப்படி ஒரு நரக வேதனையை தரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அடுத்த நாள்.

முகிலனை தேடி அவன் வீட்டுக்கு அன்பு சென்றபோது, அவன் அங்கே இல்லை. அவனை தேடி Kinetic Honda வில் சுற்றினான். ஒரு வேளை பேங்க் வேலையாக வெளியூர் சென்றிருப்பானோ? பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு வரும் ஆறு மணி பேருந்துக்கு காத்திருந்தான். நினைத்தது போலவே முகிலன் அதில் இருந்து இறங்கி வர, அன்பு வண்டியோடு சென்று அவனை மறித்தான்.

"முகிலா.. உன்னை தான் நான் தேடிட்டே இருந்தேன்.. எங்கடா சொல்லாம கொள்ளாம போயிட்ட.. வா.. ஏறிக்க"

"அன்பு.. நான் நேத்தே சொல்லிட்டேனே.. என்னை பாக்க வராத.."

"அப்படி என்னடா கோபம்.."

"உன்னை மாறி பணக்காரங்களுக்கு என்னை மாறி ஏழைங்க விளையாட்டு ஜாமான் மாறி இல்லை? நீங்க சொல்றதை செய்யணும்.. உங்க ஆசைகள் மட்டும் நடக்கணும்.. வேண்டாம் அன்பு.. என்னை நம்பி.. எங்க வீடு இருக்கு.. அவங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்கை நான் தான்.. நான் உனக்கு எவ்வளவு தேவையோ அதைவிட பலமடங்கு அவங்களுக்கு நான் தேவை.. உன் விளையாட்டெல்லாம் வேண்டாம்.. வினையாயிடும்.. விட்டுடு"

"மச்சி.. நான் விளையாடலை.. உன்னை ரொம்ப லவ் பண்றேன்..."

"இல்லை.. இதுக்கு பெரு லவ் இல்லை.. கிளம்பறேன்.."

முகிலன் வேகமாக வீட்டை நோக்கி நடப்பதை கண்டு உள்ளுக்குள் அழுதான் அன்பு. முகிலனின் போக்கில் மாறுதல் இல்லை. இவ்வாறே இரண்டு வருடங்கள் கடந்தன.

___________________________________

1999 மார்ச் மாதம்.

அன்புவின் அப்பா இப்பொது சுற்றுலா துறை அமைச்சர். சித்தப்பாவோ எம்.பி. இருவரும் நல்ல செல்வாக்குடன் இருக்க, சொத்துக்கள் நல்லா பக்கமும் பெருகி இருந்தது. திண்டுக்கல்லில் ஒரு பெரிய பங்களாவை சித்தப்பா இழைத்து இழைத்து கட்டி இருந்தார். சட்டசபை, லோக்சபா நடக்காத நாட்களில் பெரும்பாலும் அப்பாவும் சித்தப்பாவும் அங்கு தங்கி கட்சி வேலைகளை செய்து கொண்டிருந்தனர். வார கடைசியில் பெரும்பாலும் ஊரில் இருப்பார்கள்.

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Où les histoires vivent. Découvrez maintenant