30. காலத்தின் கோலம்

270 6 0
                                    

அன்பு பஸ்ஸில் அமர்ந்து கொண்டு, வெளியே சத்தமிட்டு கொட்டும் மழையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவன் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது.

'என் கையே என் கண்ணை குத்தியது போல, முகிலன் என் நம்பிக்கையை சிதைத்து விட்டானே! தமிழ் எப்படி அவனை மணந்தாள்? செய்த சபதத்தில் அவள் வென்றுவிட்டாள், நான் வாழ்க்கையில் தோற்று விட்டேன்'

அன்புவுக்கு துக்கம் தொண்டையை அடைத்து விட்டது. மொபைல் போனை எடுத்து பார்த்தான். 25 மிஸ்டு கால்கள் செல்வத்திடம் இருந்து வந்திருந்தது. பல மெஸேஜுகளையும் அவன் அனுப்பி இருந்தான். 

பார்த்துக்கொண்டிருக்கும் போதே செல்வத்திடம் இருந்து மறுபடியும் போன்.

'எடுக்கலாமா, வேண்டாமா' என யோசித்து விட்டு போனை எடுத்து பேசினான்.

"சொல்லுடா"

"அன்பு.. என்னடா, எங்க இருக்க..? நீ அவசரமா சென்ட்ரல் பக்கத்துல இருக்க பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்துடு.. ரொம்ப முக்கியமான விஷயம்"

"செல்வம்... வேண்டாம்... எனக்கு எங்கேயும் வர மனசில்லை. நான் ஊருக்கு போறதுக்கு பஸ்ல ஏறிட்டேன். நீயும் கிளம்பிடு. உனக்கு மனைவி, மகள் இருக்காங்க. எனக்காக நீ பழைய முடிஞ்சு போன கதைகளை தேடி அலையாம வீட்டுக்கு போ. ஹாஸ்டல்ல என்னோட பெட்டியில முப்பதாயிரம் ரூபா பணம் இருக்கு. நீ எடுத்துக்கோ. என்னோட பூர்வீக சொத்துக்களை தமிழோட மகன் கிருஷ்ணாவுக்கு மாத்தி கொடுத்துடு. நான் கிளம்பறேன்டா. கடைசி காலத்துல நீ தான் எனக்கு ஹெல்பா இருந்த... தேங்க்ஸ் டா.."

மறுமுனையில் செல்வம் கதறினான்.

"அன்பு போனை வச்சிடாதடா.. கெஞ்சுறேன்.. முகிலன் அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கான். நீ வா.. நேருல வா. நீ வந்தே ஆகணும்.. "

அன்புவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

'முகிலனுக்கு என்ன ஆச்சு.. கடவுளே.. எதற்கு இவ்வளவு சோதனைகள்.. வேண்டாம்.. அவனை நீ தண்டித்து விடாதே. அவனுக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது. அவனை விட்டு விடு.. எதை வேண்டுமானாலும் இந்த அன்புவுக்கு கொடு. அவனை விட்டு விடு..'

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now