பேண்ட் கீழே கிடக்க தடுமாறி எழுந்து நின்ற அன்பு, வலது தோலை கொண்டு சட்டையோடு
வாய்ப்பகுதியில் இருந்த முகிலனின் கஞ்சியை பதட்டமாக துடைத்தான்.மெல்லிய வறண்ட குரலில்,
"அப்பா.." என அவன் சொல்ல,
காலில் இருந்த வெள்ளை செருப்பை எடுத்து கன்னத்தில் பளாரென்று அவன் அப்பா அடித்து,
"அந்த நாற வாயால, இனி என்னை 'அப்பா'ன்னு கூப்பிடாத" என கூறி இடுப்பில் காலை வைத்து இரண்டு மிதி மிதிக்க அன்பு கீழே விழுந்து மயக்கமானான்.
---------------
அன்பு எழுந்தபோது காலை எட்டு மணி இருக்கும். அருகே அழுது சிவந்த விழிகளோடு அம்மா. கூடவே சித்தி.
'என்னோட ரூமுக்கு எப்படி வந்தேன்..?.. முகிலன் வீட்டில் என்ன ஆனது?.. முகிலனுக்கு என்ன ஆனது..?' என பல கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்த மண்டை சூடானது. அன்பு போர்வையை தூக்கி எறிந்து விட்டு நடக்க முயன்றான்.
அம்மா பதட்டமாகி, "அன்பு.. எங்க போற. நில்லு. நீ ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லி இருக்கார்."
"அம்மா! முகிலன் எங்க? அவனுக்கு என்ன ஆச்சு?"
"அதை பத்தி பேச இது நேரமில்லை. நீ ஓய்வெடுக்கணும்"
"அம்மா நீ புரிஞ்சுக்காம பேசுற. என்னால முகிலனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம ஓய்வு எப்படி எடுக்க முடியும்?"
"அப்ப நான் படற கஷ்டம் பத்தி உனக்கு கவலை இல்லை? பெத்த வயிறு பத்தி எரியுது. பரிதவிக்குது. அதுக்கு உன்னால ஒன்னும் பண்ண முடியாது. இல்லை கண்ணு? நீ உடம்பு முடியாம இருக்கப்ப என்னால ஒரு வாய் சாப்பிட முடியுமா? சொல்லு கண்ணு?"
சித்தி, "அன்பு.. அம்மா சொல்றதை கேளு. அது ராத்திரி முழுக்க அழுதுட்டே இருந்துச்சு. அம்மா பாவம் இல்லை அன்பு?"
"அம்மா, சித்தி.. எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம். என்னோட கவலையே முகிலனுக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்னு தான்.! முகிலன் உயிரோட இருக்கானா இல்லையா? எனக்கு என்ன ஆச்சு?"
YOU ARE READING
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)
RomanceAnbu, a college lecturer, with a sorrow past of love failure but everything changes because of one phone call. Perhaps will it bring what has been missed in his life - love? Or will it devastate him even more? Read this story full of great moments...