27. மீண்டும் க்ரிஷ்

273 7 0
                                    

வினோத், "அன்பு.. உன் மனச திடப்படுத்திக்கோ... காலையில மிலிட்டரில இருந்து தந்தி வந்துது. இங்கிருந்து லீவு முடிஞ்சு ஊருக்கு போன முகிலன் காஷ்மீர்ல இருக்க மிலிட்டரி குவார்ட்டர்ஸ் போறத்துக்கு பஸ்சுல போனப்ப அங்க நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல்ல இறந்துட்டான்... அந்த பஸ்ல பயணம் செஞ்ச ராணுவ வீரர்கள், பொதுமக்கள் எல்லோரும் ஸ்பாட்ல இறந்துட்டாங்களாம்... யாருடைய உடலையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எல்லாம் சிதைஞ்சு போச்சு. அதனால அங்கயே தகனம் பண்ணிட்டாங்களாம். முகிலனோட உடைகள் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்துவிடும்னு சொல்லிருக்காங்க"

அன்புவின் கண்கள் இருண்டது போல ஆகி, அங்கேயே மயங்கி விழுந்து விட்டான்.

------

மயக்கம் களைந்து எழுந்த அன்பு மணியை பார்த்தபோது, பிற்பகல் மூன்று மணி.

"அன்பு உடம்புக்கு பரவல்லையா" என வினோத் கேட்க,

அன்புக்கு அவனை பார்த்ததும் முகிலன் ஞாபகம் வந்து விட்டது. கதறி கதறி அழ தொடங்கினான்.

வினோத் அவனை அணைத்து கண்களை துடைத்து ஆறுதல் சொன்னான்.

"அன்பு உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. நிலையில்லாத உலகம்னு இதனால தான் சொல்றாங்க. கஷ்டமும் சந்தோஷமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஒருத்தர் வாழ்க்கை ஒருத்தரோட மறைவுல இல்லை. இந்த நேரத்துல தான் நீ ரொம்ப தைரியமா இருக்கணும். மனச விட்டுடாதே. ஒரு வாசலை மூடினா இன்னொரு வாசல் திறக்கும். உன் வாழ்க்கையில அப்படி நடக்கும். நீ கண்டிப்பா சந்தோஷமா வாழுவ"

"சந்தோஷமா? இனி எனக்கு என்ன சந்தோஷம். நான் கிளம்பறேன் வினோத். நீ நண்பனா சொன்ன ஆறுதலுக்கு நன்றி. அதை கேக்குற மனநிலையில் நான் இல்லை"

அன்பு வீட்டுக்கு செல்லும் போது, கால்கள் துவண்டன. உலகமே வெறுமையாக மாறியது போல இருந்தது அவனுக்கு. வழியில் வந்த கிழவி, எதிரே வந்த சைக்கிள் ஓட்டுபவன், பொம்மை காரை கயிறில் கட்டி இழுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுவன், என எல்லோரும் தன்னை பரிதாபமாக பார்ப்பது போல அவனுக்கு தோன்றியது. மனசில் உள்ள வலியும், அதிர்ச்சியும், வேதனையும் அவனை வதைத்து எடுத்தன.

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now