முகிலன் தனது கதையை கேட்க கேட்க, அவனுக்குள் குற்ற உணர்ச்சி பெருகியது. கண்கள் வெட்கத்தால் சிவந்து கீழே நோக்க ஆரம்பித்தது.
"மச்சான்.. என்னை மன்னிச்சிருடா.. உன் முன்னாடி ஒரு புழுவா நிக்கிறேன்.. எனக்கு என்னையே நம்ப முடியில.. ஏண்டா பிழைச்சு வந்தோம்னு இருக்குடா.. சாரி டா.. மச்சான்.. உனக்கு துரோகம் பண்ணி இப்படி ஒரு வாழ்க்கை.. சீ.. என்னடா.. எனக்கு புரியல.. "
"மச்சான்.. என்ன வார்த்தை சொல்ற.. ? இங்க பாரு.. நடந்த எந்த விஷயத்துக்கும் நீ பொறுப்பில்லை.. எல்லாம்.. விதி.. உன் ஞாபகமெல்லாம் போன பிறகு நடந்ததுக்கு நீ எப்படி பொறுப்பாவ?.. தேவை இல்லாம மனசை குழப்பிக்காத.. நடந்தது எல்லாம் நன்மைக்குன்னு நெனச்சுக்க.. ஞாபகம் இருக்கா? என்னோட பதினெட்டாம் வருட பர்த்டே அன்னிக்கு, என்னோட சித்தப்பா செஞ்ச வேலையால எனக்கு தீட்டு பட்டுச்சு.. அதை விட இது தப்பு இல்லை.."
"அதுவும் இதுவும் ஒண்ணா? இப்ப ஒரு 10 வயசு பையனுக்கு தகப்பனா இருக்கேனே.."
"ஆமாம்.. அதுக்கென்ன? அவனை ஒரு தடவை பாரு.. அச்சு அசல் சின்ன வயசுல உன்னை பார்த்த மாறியே இருக்கான்.. உன்னோட அன்புக்கு ஏங்கிட்டு இருக்கான்.. நீ விமலா கிட்ட பேசி, அவன் எப்படி.. அவனுக்கு என்ன பிடிக்கும்.. நீ எப்படி அவன் கிட்ட முன்னாடி நடந்துகிட்ட.. எல்லாம் தெரிஞ்சுக்க.. அதே மாறி அவன் கிட்ட பழகணும்.."
"சரி டா.."
செல்வம், "அன்பு.. நீ கொஞ்சம் வெளில இரு.. நான் முகிலன் கிட்ட பேசணும்.."
"நான் இருந்தா என்ன? என் முன்னாடியே பேசு"
"நீயும் முகிலனும் சந்திக்கிறதுக்கு முன்னாடியே நானும் அவனும் friends. அதனால, நாங்க பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கும்.. பத்து நிமிஷம் டயம் கொடு.. நானே கூப்பிடுறேன்.."
முகிலன், "டேய்.. அவன் இருந்தா என்னடா?"
செல்வம், "நீ அமைதியா இரு.. நான் சொல்றதுல அர்த்தம் இருக்கு.."
அன்பு கோபமாக அந்த வார்டில் இருந்து வெளியேறினான்.
செல்வம், "முகிலா.. அன்பு உனக்கு சொன்ன விஷயங்கள் சரி தான்.. ஆனா இத்தனை வருஷம் அன்பு என்ன பண்ணிட்டு இருந்தான்னு உனக்கு தெரியுமா?"
STAI LEGGENDO
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)
Storie d'amoreAnbu, a college lecturer, with a sorrow past of love failure but everything changes because of one phone call. Perhaps will it bring what has been missed in his life - love? Or will it devastate him even more? Read this story full of great moments...