16. பிறந்த நாள் பேரதிர்ச்சி

325 5 0
                                    

சித்தப்பாவின் கேள்விகளுக்கு பிறகு முகிலனுடன் அதிகமாக வெளி இடங்களில் சுற்றுவதை குறைத்துக்கொண்டான் அன்பு.

வருடம் 2001. ஜூன் மாதம்.

தமிழ் ப்ளஸ் டூவில் ஏனோ தானோவென பாஸ் செய்துவிட்டாள். அன்பு சென்னையில் இருக்கும் அரசு செவிலியர் பள்ளியில் இடம் கிடைத்தது. சித்தி சொல்லி இருந்ததை போல அவளை சென்னை ஹாஸ்டலுக்கு பேக் செய்து அனுப்பி விட்டாள். அன்புவுக்கு அவள் சென்றது ஒரு வித நிம்மதியை தந்தது.

முகிலனுக்கோ இது கல்லூரி இறுதி ஆண்டு.

“முகிலா.. காலேஜ் முடிச்சிட்டு என்னடா பண்ண போற?” அன்பு அக்கறையாக விசாரித்தான்.

“மச்சி.. உனக்கு தான் தெரியுமே.. நான் ஏதாவது வேலை தேடி கிட்டு என் குடும்பத்துக்கு ஏதாவது செய்யனும்.. ப்ளஸ் டூ பரிட்சை நேரத்தில தங்கச்சிக்கு பாம்பு கடிச்சு அவ ஆஸ்பத்திரில இருந்ததால என்னால சரியா எழுத முடியல.. இப்ப கண்டிப்பா யுனிவர்சிட்டி first வந்திருவேன்.. எதாவது வேலை கிடைக்கும்.. நம்பிக்கையோட இருக்கேன் “

"மேற்கொண்டு படிச்சா நல்ல வேலை கிடைக்குமே"

"படிக்கலாம் தான். ஆனா இப்ப ரொம்ப முக்கியம் இருக்க கடனை எல்லாம் அடைக்கிறது தான். வீடு கட்டினத்துல லோன் இருக்கு. தங்கச்சி ஆஸ்பத்திரி செலவுக்கு உங்க சித்தப்பா கிட்ட எங்க அப்பா வெத்து பத்திரத்துல கை நாட்டு வச்சிருக்கார் வேற. அதையும் சரி பண்ணனும். இந்த வருஷத்துல இருந்து தங்கச்சிய திருச்சில நான் படிச்சா ஸ்கூல்ல சேர்த்து விட்ருக்கேன். இந்த மாதிரி நிலைமையில என்னால எப்படி படிக்க முடியும் அன்பு?"

“கண்டிப்பா உனக்கு நல்ல வேலை கிடைக்கும் மச்சி.. “

அன்புவுக்கு முகிலனின் சோகம் தன்னை தாக்கியது போல இருந்தது.

“மச்சி.. இந்த வருஷம் உன் பொறந்த நாள்.. நாம திருச்சி போயி ஜமாய்ச்சிடலாம்..”

“இல்ல மச்சி.. இந்த தடவை அப்பா, சித்தப்பா எல்லோரும் இங்கயே இருக்காங்க.. வர்றது கஷ்டம்.. முடிஞ்சா நானே உன்னை பாக்க வர்றேன்..”

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now