6. தொட்டுவிட ஆசை

535 3 0
                                    

இரண்டு நாள் கழித்து.

அன்பு, வீட்டில் இருந்த kinetic honda ஸ்கூட்டர் ஐ எடுத்துக்கொண்டு முகிலன் வீட்டுக்கு சென்றான்.

அங்கே தன் வீட்டு வாசலில் முகிலன் தங்கையுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு,

அன்பு, "முகிலா, வாடா.. சீக்கிரம்" என்று அவசரப்படுத்தினான். உள்ளுக்குள் கருப்பன் வந்தால் காரியம் கெட்டுவிடும் என்ற பயம் வேறு.

முகிலன் வீட்டுக்குள் எட்டிப்பார்த்து,

"அம்மா, நான் வெளில போயிட்டு வந்துடறேன்.. அமுதாவை பார்த்துக்கோ"

என்று கூறிவிட்டு செருப்பை மாட்டி கொண்டு அன்புவிடம் வந்து,

"என்னடா.. மச்சி வண்டி புதுசா.. ?" என்றான்.

"போன பர்த்டேய்க்கு அப்பா கொடுத்தார்.. வா வந்து ஏறிக்கோ"

பின்னே அமர்ந்த முகிலன்,

"எங்கடா போறோம்"

"சஸ்பென்ஸ்.."

ஒரே நிமிடத்தில் அன்பு தன் வீட்டை அடைந்து வண்டியை நிறுத்தினான்.

"என்னடா இங்க.. இங்க ஏன்டா கூட்டிட்டு வந்த... தேவை இல்லாம பிரச்னை வேண்டாம்.. உனக்கு எனக்கு.. நம்ம கூட இருக்கவங்க எல்லோருக்கும் பிரச்சனை"

"வா.. ஒன்னும் பிரச்சனை இல்லை"

கையை பிடித்து முகிலனை அன்பு உள்ளே இழுக்க, உள்ளே தயங்கி வந்த முகிலனை அம்மா வரவேற்றாள்.


"வாப்பா.. நல்ல இருக்கியா.. உக்காரு"

"இருக்கேன் அம்மா"

குழப்பமாக அன்புவை பார்த்துக்கொண்டு முகிலன் உட்காராமல் நின்றுகொண்டிருந்தான்.

"கோகிலா.. முகிலனுக்கு காபி கொண்டுவா"

"வேண்டாம்மா.. இப்ப தான் சாப்பிட்டுட்டு வர்றேன்"
"பரவால்ல.. ஒரு வாய் குடி.. உன்னை சேர்ல உக்காருன்னு சொன்னேன் இல்லையா"

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Donde viven las historias. Descúbrelo ahora