முகிலனை அதற்கு பிறகு அன்பு பார்க்க முடியவில்லை. அவ்வப்போது முகிலன் விசேஷம், திருவிழா என வருவான். அப்போதெல்லாம் அவனிடம் பேச முடிகிறதோ இல்லையோ, எப்படியும் அன்பு அவனை பார்த்து விடுவான். முகிலனின் கண்களில் சிநேகம் பேசும்.
ஒரு வருடம் கழித்து அன்பு, பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு முகிலன் காத்துகொண்டு இருப்பதை கண்டு அங்கே சென்றான்.
பல நாள் மனதை அரித்த கேள்வி. கேட்டுவிட்டான்.
அன்பு, "டேய்.. அன்னிக்கு.. எனக்காக ஏண்டா பொய் சொன்ன.. மிஞ்சி போனா சித்தப்பா என்னை நாலு அடி அடிச்சிருப்பாரு.. அதுக்கு போயி"
"நீ என் friend டா.. நீ என்னால அடி வாங்குறதை நான் எப்படி பாத்துகிட்டு இருக்க முடியும்.. அவ்வளவு சொந்த காரங்க .. பெரிய ஆளுங்க இருக்கிறப்ப.. அதெல்லாம் விட்டுட்டு எனக்காக கேக் எடுத்துட்டு வந்தியே.. உன்னை நான் எப்படி அடி வாங்க விடுவேன்.."
அன்புவின் கண்கள் கலங்கின.
"எங்களுக்கு இதெல்லாம் பழகிடுச்சு.. ஆனா உன்னை நெனச்சா தான் ஒரு மாதிரி இருக்கு.. உன்னை யாரு கூடையும் சேர விடாம.. வீட்ல அடைச்சு வச்சு.. நல்லால்ல.. அன்பு.. உங்க சித்தப்பா சரியில்ல.. நான் கிளம்பறேண்டா... பஸ்ஸு வந்திருச்சு... பாப்போம்"
முகிலன் அன்புவை பாசமாக பார்த்துவிட்டு பஸ்ஸில் ஏறினான்.
வருடங்கள் கடந்தன. அவர்கள் நட்பும் தொடர்ந்தன. விடுமுறை காலங்களில் இருவரும் யாருக்கும் தெரியாமல் மலை அருகே சென்று பேசி கொள்வதும் விளையாடுவதுமாக இருந்தனர். பதின்பருவதை எட்டிவிட்டனர் இருவரும்.
அன்புவுக்கு விடலைப்பருவத்திற்கு உரிய விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன. முகிலனை அவன் மனம் மறக்க வில்லை. ஒரு நண்பனாக மனதில் வீற்றிருந்த முகிலன் இப்பொது சில நாட்களாக கனவில் வருகிறான். ஒரு முறை முகிலன் தன் அருகில் கட்டிலில் படுத்திருப்பது போன்ற கனவு வந்தது. ஒரு முறை கனவில் முகிலன் கட்டி பிடித்து முத்தமிட்டான், உடனே அன்புவுக்கு ஷார்ட்ஸ் நனைந்து விட்டது. அம்மாவுக்கு தெரியாமல் அதை கழற்றி கழுவி காயவிட்டான்.
YOU ARE READING
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)
RomanceAnbu, a college lecturer, with a sorrow past of love failure but everything changes because of one phone call. Perhaps will it bring what has been missed in his life - love? Or will it devastate him even more? Read this story full of great moments...