31. உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே..

355 7 1
                                    

விமலா தொடர்ந்து,

"முகிலனோட உடல்நிலையில எந்த பிரச்னையும் இல்லை... காயங்கள் குணமாகிடுச்சு. மனநிலை தான்.." என தயக்கமாக வாக்கியத்தை முடிக்காமல் அன்புவை பார்த்தாள்.

அன்பு பதட்டமாகி, "என்ன விமலா!!! ... அய்யோ, என்ன சொல்றீங்க!!! அவனுக்கு என்ன ஆச்சு?!!!"

"அவரால என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியில. அம்மாவிடமும் அவர் அப்படி நடந்துக்கிட்டார். அவருக்கு ரொம்ப பலகீனமா இருக்கிறதால, அவரால அதிகம் பேச முடியில. டாக்டர் கொஞ்ச நாள் வெய்ட் பண்ண சொல்லி இருக்கார். அவரோட யூகம் என்னன்னா, முகிலனுக்கு பழைய ஞாபகம் எல்லாமே போயிருச்சுங்கறது தான். அதாவது முகிலன் வாழ்ந்த முதல் வாழ்வும் இரண்டாம் வாழ்வும், ரெண்டும், அவருக்கு மறந்து போயிருக்குமோன்னு டாக்டர் நினைக்கிறார்"

அன்பு உடைந்து போய் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் நீர் விட்டபடி இருக்க, செல்வம் வந்து அருகில் அமர்ந்து ஆறுதலாக தாங்கி கொண்டான்.

விமலா, "எனக்கு இருக்க பெரிய கவலையே, எவ்வளவு நாள் கிருஷ்ணாவுக்கு தெரியாம இதை மறைக்க முடியும்ங்கிறது தான். கிருஷ்ணா அங்க அப்பாவோட அன்புக்கு ஏங்கிட்டு இருக்கான். இதெல்லாம் முகிலனுக்கு புரியனும். கிருஷ்ணா கிட்ட மறுபடியும் அதே பாசத்தோடு பழகணும்"

அன்புவுக்கு விமலாவின் சொற்கள் ஈட்டியை போல நெஞ்சை குத்தின.

'நான் இங்கே என்ன நோக்கத்துக்காக வந்தேன்... ?அவனோடு சேர்ந்து விடலாம் என்ற நப்பாசையில் தானே... ஆனால் ஒரு சிறுவன் தாயை இழந்து, தந்தையின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு அங்கே காத்திருக்கிறான். எனக்கு விடிவு கிடைக்கிறதோ இல்லையோ, அவனுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும்! கடவுளே இதற்கு ஒரு விடை சொல்'

விமலா, "அன்பு, நீங்க அம்மாவோட இருங்க. நான் முகிலனை வார்டுக்கு மாத்தின பிறகு வந்து சொல்றேன். நீங்க எல்லோரும் வந்து பார்க்கலாம்"

விமலா கிளம்பி செல்ல,

அன்பு விரக்தியோடு, செல்வத்தை நோக்கி,

மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)Where stories live. Discover now