பொன்மாலைப் பொழுது கரைந்து இருள் லேசாக படரும் நேரம்... மிகப் பெரிய அரண்மனை போன்ற வீடு. வீட்டில் விருந்தினர் அனைவரும் பங்கேற்க..
தன் நிறத்திற்கு எடுப்பான அடர் சிவப்பு நிற சோலி அணிந்து வெள்ளை நிற அணிகலனில் முகம் முழுவதும் ஆனந்தத்துடன் பால்நிற மேனியவள் தேவதையாய் திகழ்ந்தாள் ராஜி எனும் ராஜஸ்ரீ.
வெள்ளை வேஸ்டி சட்டையில் கனக்கச்சிதமான உடலமைப்புடன் அடர்ந்த மீசையுடன் கூர்மையான விழிகளுடன் ஹீரோ என்று கூறுவதற்கு அடையாளமாய் திகழும் அமுதன் அவள் அருகில் நின்று இருந்தான்.
அமுதன் தன் முன் அழகின் மொத்த உருவமாய் திகழும் ராஜியின் பொன்னான பஞ்சு போன்ற கரங்களினைப் பற்றி விரல்களில் நிச்சய மோதிரம் அணிவிக்க சுற்றிலும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராஜியும் மோதிரம் அணிவிக்க முயற்சிக்கும் முன் அவன் முகத்தினை நிமிர்ந்து பார்த்தாள். மருந்திற்கும் அவன் முகத்தில் சிரிப்பில்லை. மனம் உருத்தினாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் முழுவதும் தன் அண்ணன் மேலான நம்பிக்கையுடன் அமுதனுக்கு அணிவித்தாள்.
அடுத்த நொடி அவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். அவளும் எதுவும் நடக்காதது போன்று தோழிகளுடன் பேசத் தொடங்கினாள். ரம்யா அவளை சீண்ட... வெட்கினாள். இதெல்லாம் பார்த்த வேதா(வேதராஜ்) தங்கையின் வாழ்க்கை நல்லவன் கையில் சேர்க்கப்படும் என்பதில் நிம்மதி அடைந்தான்.
உடன்பிறப்புகள் அனைவரும் போட்டோ எடுக்க அழைக்கப்பட அமுதன் அவர்களிடம் இருந்து தள்ளிச் சென்று அவன் தம்பியை அழைத்து வர.. வேதா பொறுமை ஆக இருந்தான்.
அமுதன் ஹாலில் இருந்த அனைவரையும் அழைத்து போட்டோ எடுக்க... கடைசியில் வேறு யாரும் இல்லை என்ற நிலையில் வேதா அவன் தம்பி யுவா(யுவராஜ்), ரம்யா மற்றும் சசிகலா அனைவரும் போட்டோ எடுத்தனர்.