அமுதன் சாப்பிடாமல் செல்லவும் ராணி பரணியினைப் பார்க்க.. பரணி அவனைக் கண்டு கொள்ளவில்லை. ராஜிக்கு அவன் சாப்பிடாமல் சென்றது மனதில் சிறு வலி தர... அவள் அண்ணனிடம் சிறிது நேரம் பேசிய பின்னர் பரணியும் கலந்து கொண்டான்.. யுவா மட்டும் இறுக்கமாக இருப்பதைக் கண்ட பரணி அவனின் கரத்தினைப் பற்றிக் கொள்ள அவனும் அமைதியாகினான்.
பின் இருவரும் அமுதனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப... ராஜிக்குக் கண்களில் குளம் கட்டியது... அவர்களுக்கும் அதே நிலை.. ஆனால் ஆண் மகன் என்ற ஒரே காரணம் அவர்களின் விழிநீர் சிந்தவில்லை. இருவரும் மனதில் ஏறிய பாரத்துடன் திரும்பிச் சென்றனர். ராஜியின் அருகில் வந்த பரணி அவளின் கரத்தினைப் பற்றிக் கொள்ள... அவளும் அவனின் கரத்தினைப் பற்றிக் கொண்டாள். இதனை மேல் இருந்து பார்த்த அமுதன் அதன் பின் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.
பரணி அவளிடம் கதை பேசத் தொடங்க அவளும் அந்த மனநிலையில் இருந்து வெளிவந்தாள். அமுதன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் மேலும் பொறுமை தாங்காமல் மாடியின் முனையில் வந்து நின்று "பரணி வேலை பார்க்குற எண்ணம் இருக்கா.. இல்லை இப்படியே அரட்டை அடித்துக் கொண்டு இருக்கப் போரியா??", அமுதன்.
"வறேன் அண்ணா", என்றவன் எழுந்து செல்ல... அவன் முகம் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை ராஜி. அவளின் முகம் காணா போக்கினைக் கண்டவன் நமக்கென்ன என்ற ரீதியில் உள்ளே நுழைந்துவிட..
இனி தான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன எனப் பட்டியிலிடத் தொடங்கினாள்...