அத்தியாயம் 14

102 15 20
                                    


வேதா, யுவா இருவரும் பட்டு வேஷ்டி சட்டையிலும், சசி ஆகாய வண்ண நிறத்தில் கோல்டன் வொர்கிங் செய்த புடவையும், ரம்யா மணப்பெண்ணுக்கான வேலைப்பாடுடன் ஆன தங்க நிற ஜரிகை உடைய புடவையிலும் என வீட்டின் வெளியில் வர... சங்கர்தேவன் அந்த நேரத்திற்கு வரவும் அனைவரும் ஒரு காரில் ரிஜிஷ்டர் ஆபிசிற்குச் சென்றனர். அங்கு இவர்களுக்கு முன்னரே வருகை தந்திருந்தனர் ராஜி அமுதன் பரணி மூவரும்.


அமுதன் வெண்மை நிற சட்டை மற்றும் கருநீல நிற ஜீன்ஸ் சகிதம் கம்பீரமாய் நிற்க.. ராஜி மயில் வண்ண வொயிட் ஸ்டோன் பதிந்த பட்டுப் புடவையில் புன்னகை உருவாய் நின்றிருந்தாள். பரணி ரெட் வித் பிளாக் என இருக்க சசியின் ரெட் வித் பிளாக் சாரியில் உள்ளே சிரித்துக் கொண்டான்.  ரம்யாவினைக் கண்ட ராஜி ஓடி அவளை அணைத்துக் கொள்ள அந்த நொடியில் ரம்யாவிற்கு மனதில் இருந்த சஞ்சலம் யாவும் அகன்று முழுமனதுடன் வேதாவினைக் மணந்து கொள்ள உடன் நடந்தாள்.

வேதா அமுதனை அர்த்தத்துடன் பார்க்க அமுதன் வேதாவின் விழிகளினை மட்டுமே அழுத்தமாய் பார்த்துவிட்டு ரிஜிஸ்டரிடம் திரும்பி உரையாட.. வேதா ரம்யாவின் முகத்தினை இதில் உனக்கு சம்மதம் தானே எனும் படி நோக்க.. ரம்யா அவனை முகம் சுளித்தால்.. வேதா அவளின் சுளிப்பில் புன்னகை வரவும் தனது முகத்தினை கீழே குனிந்து கட்டுப்படுத்தவும்.. ராஜி, "ஹேய் என்ன டி என் அண்ணாவ சைட் அடிக்குற.." எனக் கூற திரும்பிய ரம்யா ராஜியினை முறைக்கவும்.. ராஜி ரம்யாவின் பார்வையினைக் கண்டு தப்பிக்கும் வண்ணம் அவளை அறியாது அமுதனின் அருகில் அவனை நெருங்கிய வண்ணம் நின்று "எல்லாம் முடிஞ்சதா.. இனி கையெழுத்து போட்டா ஓவர் தானே ", எனக் கூற அமுதன் அவளின் செயலில் சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு "என்ன பன்ற" என அடிக்குரலில் சீறினான்.

அவனின் குரலில் இருந்த பேதத்தினை உணராதவள் "இன்னும் என்ன பன்றீங்க? குடுங்க கையெழுத்து போடனும்ல" எனக் கூறிக் கொண்டே அமுதனைக் காண.. அவன் முகத்தில் இருந்த செய்தியில் கீழே குனிந்தாள்.

கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !Where stories live. Discover now