அத்தியாயம் 6

116 17 22
                                    

சூரிய ஒளி பால்கனியின் கண்ணாடிச் சுவர் வழியிலிருந்துத் தன்னைத் தீண்டுவதினை உணர்ந்து ராஜி கண் விழிக்க சுற்றுப்புறம் உணரச் சில நொடிகள் எடுத்தது.

உணர்ந்த அடுத்த நொடி அமுதனை விழிகளில் தேட... அவன் அங்கு இல்லை. அப்பாடா.. என நினைத்த ராஜி வேகமாகத் தன்னை சுத்தம் செய்ய டவளை எடுத்துக் கொண்டு பாத்ரூம் செல்ல...

அமுதன் அப்பொழுதுதான் தனது உடற்பயிற்சி முடிந்து அறைக்குள் நுழைந்தான். வந்தவன் குளியலைறையில் அவள் இருப்பதை அறிந்து தனக்கு மட்டும் எடுத்து வந்த டீயினைப் பருகத் தொடங்கினான்.

தன்னை சுத்தம் செய்து வெளியில் வந்தவள் சோபாவில் அமுதன் டீ பருகுவதனைப் பார்த்துத் தனக்கும் எடுத்து வந்துள்ளானா எனப் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியது. அவளின் செயலைப் பார்த்த அமுதன் டீ பருகிய தம்ளரினை அங்கு வைத்து விட்டுத் தயராக வைத்திருந்த ஷர்ட் பேன்ட் டவல் எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்று விட்டான்.

பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டவள் அவன் பருகிய டம்ளரினை எடுத்துக் கொண்டு கீழே செல்ல... கையில் டீயுடன் வந்த பரணி..

"அண்ணி... ஹாப்பி மார்னிங். உங்களுக்கு தான் டீ எடுத்துட்டு வந்தேன்... நீங்க தூங்குறீங்கனு அண்ணன் சொன்னார்", பரணி.

"ஹாப்பி மார்னிங்... உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நானே வந்து எடுத்துப்பனே", ராஜி அவனிடம் கூறிக் கொண்டே தம்ளரினை வாங்கிக் கொண்டாள்.

"அண்ணி என்னை பரணினு கூப்பிடுங்க.. ப்லீஸ். இங்கே எப்பவும் நான் தான் டீ போடுவேன். ஸோ... டீ எப்பவும் என் கையில் தான் நீங்க குடிச்சு ஆகனும்", என்று சொல்லி புன்னகைத்தான்.

"சரி... நீயும் என்னை பேர் சொல்லி கூப்பிடு. உனக்கும் வயசு கூட தான... ", ராஜி.

"அண்ணி நீங்க... உங்களை எப்படி", பரணி தடுமாற

"அப்போ நான் நீங்க போட்ட டீயும் குடிக்கல...", ராஜி.

"சரி அண்ணி.. சாரி... ராஜி...", பரணி.

"குட். நான் போய் சமையலுக்கு ஹெல்ப் பன்றென். பை", ராஜி.

கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !Where stories live. Discover now