அத்தியாயம் 4

105 17 2
                                    

ரம்யா, சசி மற்றும் ராஜி மூவரும் ஒரு கடையில் அமர்ந்திருந்தனர். அந்தக் கடை ஓனர் அவர்களிடம் இடத்தினைச் சுற்றிக் காட்டிக் கொண்டு இருந்தார். மூவருக்கும் அவ்விடம் மிகவும் பிடித்து இருந்தது. அந்த இடம் பல மால்களுக்கு அருகிலும் எப்பொழுதும் கூட்டமாய் இருக்கும் இடமாகவும் இருந்தது. பார்லர் ஓபன் செய்ய சிறந்த இடம். மூவரும் இணைந்து அட்வான்ஸ் கொடுத்து அந்த இடத்தினை வாங்கி இருந்தனர்.

பல இடம் தேடியும் கிடைக்காமல் கடைசியில் இவரே வந்து கடை தருவதாகக் கூற... மூவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. இடம் கிடைத்த மகிழ்ச்சியில் விரைவாக வேதாவிடம் சென்று கூற.. அவனும் மகிழ்ச்சியினைத் தெரிவித்தான்.

இனி தேவையானப் பொருள்கள் மட்டுமே வாங்க வேண்டியது. அதன்பின் இவர்களுக்குச் சொந்தமான தொழில். மூவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தில் யுவா மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென அனைத்து வேலைகளையும் அவனே பார்த்துப் பார்த்துச் செய்தான்.

நாட்கள் அப்படியே ஓடியது. ஆனால் அமுதன் மற்றும் ராஜி வாழ்வில் சிறிதும் மாற்றம் இல்லை. ஆனால் ராஜி அதனைப் பற்றி எந்தவித வருத்தமும் கொள்ளவில்லை.

திருமண நாளும் அருகில் வந்தது. நாளை திருமணம். அதற்கு முதல் நாள்
சடங்கு நடந்தது. அமுதன் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் புன்னகை முகமாகவே நடந்து கொண்டான். வேதாவும் மனநிறைவுடன் விளங்கினான். மண்டபத்தில் அனைத்துச் சடங்குகளும் முடிந்து அனைவரும் உறங்கத் தொடங்க... ராஜி மட்டும் தூக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தாள். சரி மேலே சென்று வருவோம் என மாடிக்குச் செல்ல... அங்கு யுவா தனியாக வானத்தினைப் பார்த்து நின்று கொண்டு இருந்தான். அவன் தோள் தொட... திரும்பியவன் கண்கள் கலங்கி இருந்தது. அதனைக் கண்டவள் துடித்தாள்.

"என்ன ஆச்சு யுவி. என்ன பிரச்சினை சொல்லு", ராஜி.

"உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா சொல்லு டா. நான் பார்த்துக்குறேன்", யுவா.

கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !Donde viven las historias. Descúbrelo ahora