அதிகாலை பனி சூழ்ந்துள்ள வேலை அமுதன் வீட்டின் வெளிப்புறத்தில் ஜாக்கிங் செய்யும் நேரம் பால்கனி அருகில் வந்த ராஜி அவனைக் கண்டாள். மெல்லிய கிரீம் கலர் டீசர்ட் மற்றும் கருநீலநிற லோயர் சகிதம் கைகளில் ஸ்டாப் வாட்சுடன் தலையில் ஸ்கார்ப் உடன் வந்தவன் அருகில் இருந்த கல்மேடையில் அமர்ந்தான். சிறிது நேரம் வானம் பார்த்து மேகங்களின் அழகினிலே தன்னை தொலைத்தவன் கதிரவனின் ஒளி இல்லாது போக குளிருக்கு இதமாய் அருகில் செந்தழலாய் எரிந்து கொண்டிருந்த தீமூட்டலில் விழிகளினைச் செலுத்தினான். அந்த நொடி அவனது இதழில் மழைத்துளி பட்டுச் சிதறியது. சிதறிய துளிகளினை உணர்ந்தவன் என்றும் தன்னை தழுவி இருக்கும் இறுக்கம் தளர்ந்து புயத்தினை லேசாக்கி விழிகளினை மென்மையாக்கி கரங்களினை வான் நோக்கி உயர்த்தி ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்கினான். தூரத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருந்தவள் மழை வரத் தொடங்கியதை உணர்ந்து அவனை உள்ளே வர சொல்லி அழைக்க படிகளில் ஓடினாள். ராஜி படிகளில் ஓடுவதினைக் கண்ட பரணி, அண்ணனைப் போல் இவளுக்கும் மழை என்றால் பிரியம் போல என எண்ணி "ராஜி அப்போ உனக்கும் ரெயின்ஸ்நாக் எடுத்து வைக்கவா" எனக் கேட்க.. ராஜியும் "ஆஹ்ன் எனக்கும் வேணும் சூடா.. எடுத்து வை", என்று கூறிவிட்டு அவனிடம் நிற்காது ஓடி விட்டாள்.
ஓடியவள் கண்டது.. தான் எந்த இடத்தில் பார்த்தமோ அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறானே என எண்ணியவள் வேகமாய் அவனிடம் சென்று அவன் சிகைக்கு தனது புடவையினை குடையாக பிடிக்க.. ஒருவித போதையினில் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டு இருந்தவன் திடீரென தலை உயர்த்திப் பார்க்க.. செந்நிற உடை தான் விழிகளுக்குத் தெரிந்தது.. குனிந்து பார்க்க ராஜியின் முகம் அவன் முகம் அருகில் இருக்க.. ஒரு நொடி அவனது விழியில் மின்னல் வர.. அது பிரம்மையோ எனும்படி மறைந்தும் போனது.. அவ்விடத்தினை சினம் ஆட்கொண்டது.. அவனின் மின்னல் விழிகளினை பார்க்கத் தவறிய ராஜி சினம் கொண்ட விழிகளினை பார்க்கத் தவறினாளில்லை. அவனின் விழிகளின் வீரியம் தாங்காமல் பின்னே நகர.. நகர்ந்தவள் கீழெ இருந்த தோட்டம் அமைக்கும் சின்ன திட்டினை மறந்து இடரி விழ.. விழுந்தவள் அமுதனின் தலையில் பொருத்திய புடவையுனூடே அமுதனின் கழுத்தினை கீழே விழும் உந்தலில் பிடித்தபடி சரிய.. அவளின் உடனடி தாக்குதலில் தாங்கும் சக்தி இல்லாது அமுதனும் அவள் மேலேயே சரிந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளினை சங்கமித்த வண்ணம் இருக்க.. மழைத்துளிகள் அளவு பெரிதாக மாறி மழை வலுத்தது.. அவளினை மழை நனைக்கா வண்ணம் அமுதன் குடையாய் இருக்க.. அமுதனின் விழியினில் தன்னைத் தொலைத்தவளுக்கு எழ மனம் வரவில்லை. மழை நீர் தன் உடலினை முழுவதும் நனைத்த பின்னர் உணர்ந்த ராஜி.. "அய்யோ மழை.. இப்படி நீங்க நனையுறதும் இல்லாம என்னையும் நனைய வச்சீட்டீங்களே.. எழுந்திரீங்க" என மெல்லிய குரலில் முணுங்க.. அதுவரை அவளது விழிகளில் மட்டுமே தன்னை நிலைத்திருந்தவன் அதன் பின்னரே சுயம் கொண்டு அவளை விட்டு எழுந்து நின்றவன் திரும்ப அவனமர்ந்து இருந்த இடத்திற்கு நகர... "உள்ளே வாங்க.. ஜுரம் வந்துடும்", எனக் கூறியவளின் அடுத்த வார்த்தைகள் அமுதனின் சுடும் விழிப்பார்வையில் தாமாக மூடிக் கொண்டது. "உள்ளே போ" என கட்டளையிடும் தொனியில் கூறிவிட்டு அவன் விட்ட பணியினை.. அதாவது வான் நோக்கி முகம் சாய்த்து விழிகள் மூடி மழையினை ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்கினான்.