ராஜி அறைவாயிலில் நிற்பதனை முதலில் கண்ட பரணி அவளினைப் புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க.. அவள் அமுதனை விழிகளில் சைகை செய்ய.. பரணி தலையினை அசைத்து எழுந்து வெளியில் சென்று விட்டான். அதுவரையிலும் அமுதன் நிமிரவே இல்லை. ராஜி தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைய..
"என்ன சொல்லு", அமுதன் நிமிராமலேயே கூறவும்.. ராஜி அவன் கேட்கவும் வார்த்தை வராமல் தடுமாறினாள்.
பல நொடிகள் அமைதியில் கழிய அமுதன் அவனது மடிக்கணினியினை மூடியவன் அவளினைக் கூர்ந்து நோக்கவும்..
'இதுக்கு அவன் கீழே குனிந்து இருக்கும்போதே சொல்லிருக்கலாம்' என்றுத் தன்னையே நொந்தவள் அவளும் அவன் விழிகளினைக் கண்டாள்.
"நான் என் ப்ரண்ட்ஸ் கூட வெளியில் போய்ட்டு வரேன். அதான் உங்க கிட்ட", ராஜி.
"உன் விருப்பம்", அமுதன்.
"அப்புறம்", ராஜி இழுக்க..
"அப்புறம்", அமுதன்.
"பார்லர் வைக்கலாம்னு நாங்க ப்ளான் பண்ணோம்.. அதான் நீங்க சரின்னு சொன்னா வைக்குறேன்", ராஜி தயங்கிக் கொண்டே கூற...
"எங்கே? ", அமுதன்.
"ராம் நகர்ல ஒரு இடம்.. அங்கே தான்", ராஜி.
"ரெடி ஆகு.. நான் வரேன்", அமுதன்.
"ம்ம்ம்ம்..", என்று சந்தோசமாக வெளியேறினாள்.
அப்பொழுதுதான் ரம்யா, சசி இருவரும் வீட்டினுள் நுழைய வெளியில் அமர்ந்திருந்த பரணியின் விழிகள் தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
தன்னவளின் விழிகளும் தன் மேல் ஆர்வத்துடன் படிவதனைக் கண்டவன் காற்றில் மிதந்தான் என்றே கூறலாம்.
வந்தவர்களினை உள்ளே வரவேற்றவன் ராஜி கீழே வரவும் டீ போடச் சென்றுவிட்டான்.
"அவரும் வரேன் சொன்னார் டி. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க", ராஜி.
"பரணி சிறிது நேரத்தில் டீ உடன் வர டீயினைப் பருகிய சசி "என்ன பாஸ்.. டீ நீங்க தான் போட்டீங்களா.. இப்படி இருக்கு", எனவும்