ராஜி குடும்பமும் அமுதனின் குடும்பம் மட்டுமே இருந்தது அமுதனின் வீட்டில்...
இரவு நேரம் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டனர். வேதாவின் மனம் தவிப்பில் இருந்தது. இனித் தன் தங்கை தன்னுடன் இருக்க மாட்டாள் ஏன்பதில். ஆனால் பெண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. மாற்றம் ஆகாதே..
ரம்யா மற்றும் சசி இருவரும் ராஜியினை அலங்காரம் செய்து தேவதையாக அமுதனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
எல்லா மணப்பெண் தோழிகள் போன்றே இவர்களும் கிண்டல் செய்து அவளை உள்ளே அனுப்பினர்.
இங்கு வேதா, யுவா, சங்கர் மூவரும் பரணியிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.
"சுமிக்கு இப்பொழுது எப்படி உள்ளது... எதுவும் முன்னேற்றம் இருக்கின்றதா... ", வேதா.
"இல்லை... சார்... அவளுக்கு ட்ரீட்மென்ட் போய்ட்டு தான் இருக்கு... எப்போ வேணும்னாலும் குணமாகலாம் அப்படின்னு டாக்டர் சொன்னார். அவள் சரி ஆகுற வரைக்கும் அண்ணன் இப்படித்தான் இருப்பார். நீங்க எதுவும் நினைக்காதீங்க சார்", பரணி.
"என்னை மாமான்னே கூப்பிடு பரணி. எனக்கு அமுதனப் பத்தி நல்லா தெரியும். அவனை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சுமி வாழ்க்கை தான் எனக்கும் முக்கியம். இனி சுமி எனக்கு தங்கை தான்", வேதா.
"மாமா... ஆனால் அண்ணா சுமிய நீங்க யாரும் பார்க்க ஒத்துக்க மாட்டாங்க... அது", பரணி.
"எனக்கு அவன் மனநிலை புரியும் பரணி. ஒரு நாள் எல்லாம் மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனக்கு நம்பிக்கை இருக்கு", வேதா
"அண்ணா ரம்யா சசி வந்தாச்சு.. நம்ம போகலாமா", யுவா.
"நாங்க வரோம் பரணி. சுமியப் பார்த்துக்கோங்க", வேதா.
"சரிங்க மாமா.. ராஜி எனக்கு அண்ணி மட்டும் இல்லை. அம்மா மாதிரி.. அவங்களுக்கு இங்கே எந்த பிரச்சினையும் இல்லாமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு", பரணி.