அத்தியாயம் 10

122 15 14
                                    

வேதா கடைக்குள் நுழையும் நேரம் தான் ரம்யா ஹீட்டெரினை சரி பார்த்துக் கொண்டு இருப்பதனைக் கவனித்தான். அவள் கரம் ப்ளக்கின் கம்பியினைத் தொடும் நேரம் அவனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் புரிந்து அவளை தள்ளிவிடும் முன் அவள் கம்பியினைத் தொட்டு இருந்தாள். அவன் அவளினை இழுத்ததில் அவனும் கீழே விழ அவளும் அவனது மடியினிலேயே விழுந்தாள். அவன் எழுந்து அவளைக் காண அவனது மடியினில் மயங்கிக் கிடந்தாள். நடந்த நிகழ்வில் அதிர்ந்த ராஜி அவளினை எழுப்பக் கரம் கொண்டு கன்னத்தில் தட்ட... சசி ஒடிச் சென்றுத் தண்ணீரினை எடுத்து வந்தாள். சசியிடம் நீரினை வாங்கிய ராஜி ரம்யாவின் முகத்தினில் தெளிக்க சிறிது முகம் அசைக்க... கண் திறந்தாள். அவளின் கரம் கொண்டு தன் ஷாக் அடித்தக் கரத்தினைத் தொட்டவள் உடல் சிலிர்த்தது. அவளின் உடல் மொழியினை அறிந்த வேதா அவளினை ஆறுதலாகத் தோளில் கரம் பதித்து அழுத்தினான்.

அவனின் கரம் தீண்டலில் தான்... தான் எங்கு இருக்கிறோம் என்று அவள் பார்க்க வேதாவின் மடியினில் சாய்ந்து இருந்தாள். வேகமாக அவள் எழ முயற்சிக்க முடியவில்லை. வேதாவே அவளைக் கரங்களில் தாங்கி எழுப்பி அருகில் அமர்த்தினான்.

அதன் பின் வேதா அவளை முறைத்துப் பார்க்கவும் ரம்யாவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது. ராஜி தான் அவள் அருகில் வந்தவள் நீரினைப் பருகக் கொடுத்தாள்.

"நாளைக்கே ஹாஸ்டல்ல ரிலீவ் ஆக பர்மிஷன் கேளு. ஒரு வாரத்துல நமக்குக் கல்யாணம்", என்று ரம்யாவினைப் பார்த்து அடிக் குரலில் கூறியவன் ராஜியிடம் திரும்பி "நான் நாளைக்கு வரேன்டா... வீட்டுக்கு", என்றவன் ராஜி புன்னகைத்து தலயினை அசைக்கவும் வேதா ராஜியின் தலையினைக் கோதியவன் சென்று விட்டான்.

ராஜியும் சசியும் ஆனந்தத்தில் ரம்யாவினை அணைத்துக் கொண்டு மகிழ.. ரம்யாவிற்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.

அவளின் முக பாவனையில் ராஜி யோசித்தாளும் ஷாக் ஆனதில் அப்படி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டாள்.

கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !Where stories live. Discover now