படிகளில் துள்ளிக் குதித்து ஓடியவள் நேராகச் சென்று நின்றது வாட்ரோபின் முன்னர் தான். ஏதோ அவளுக்குத் தெரிந்த மூளையினைக் கொண்டு யோசித்து அவள் அறிந்த அந்த எண்ணினை டிஜிட்டல் லாக்கில் ப்ரஷ் செய்ய என்ன ஆச்சர்யம் திறந்து கொண்டது... யாஹூ என்று குதித்தவள் நிதானமாக அதனை ஓபன் செய்ய கதவு திறந்தது... உள்ளே சென்றவள் கண்டது... அது ஒரு குட்டி அறை மற்றும் அதனுள்ளே சிறிய ரேக்.. அனைத்தும் புத்தகங்களில் நிரம்பி இருக்கத் தனது தேடுதல் வேட்டையினைத் தொடங்கினாள். அவளின் தேடுதல் பல மணி நேரங்கள் கடந்து செல்ல... கடைசியில் மேலே இருந்த இளஞ்சிவப்பு வண்ணக் குட்டிப் பெட்டிக் கண்ணில் பட்டது. அதனை எடுத்தவள் திறக்க முயற்சிக்க.. அதனுடைய அமைப்பு அன்று அமுதனின் பர்சில் எடுத்த பெண்டன்ட் போல் இருக்க.. அவளிடம் இருந்த அந்தப் பெண்டன்டினை எடுத்து அதனைத் திறக்க... அதுவும் திறந்து கொண்டது.
திறந்தவள் கண்ணில் முதலில் பட்டது கருப்பு நிற பிஸ்டல். அதனைப் பார்த்து அதிர்ந்தவள் அதனைத் தொடவே பயந்து அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டாள். அதன் பின் மூச்சினைச் சீர்படுத்தி பிஸ்டலினை வெளியில் எடுத்து வைத்துவிட்டு உள்ளே காண அதில் இளஞ்சிவப்பு வண்ண டைரி இருந்தது... டைரியினைக் கையில் எடுத்தவள் பிரித்து முதல் பக்கம் பார்க்க... அதில் இரண்டு கண்கள்...
அவை ஒரு மங்கையின் கண்கள்... அவ்விரு விழிகளின் அழகினில் மயங்கி ராஜியே சிறிது நேரம் ஸ்தம்பித்தாள். அவளது விழிகளினையே அந்த இரு விழிகள் கயிற்றினால் கட்டிப் போட்டது... ஆசையாக வருடியவள் அதன் கீழ் இருந்த பெயரினைப் படிக்க முயற்சிக்க அது அவளுக்குப் புரியவில்லை.
பக்கங்களினைத் திருப்ப...
அமுதனின் கல்லூரி விழா நிகழ்விலிருந்து எழுதப்பட்டிருந்தது...
அந்தி வேளை... கல்லூரி முழுவதும் கோலாகலமாய் திகழ்ந்தது... மாணவர்கள் அவரவர் வேலைகளினை செய்து கொண்டும் விளையாட்டில் கலந்து கொண்டும் நண்பர்களுடன் உரையாடிக் கோண்டும் இருந்தனர்.