அமுதன் உறங்கி விட்டானா என அவனை எட்டிப் பார்த்த ராஜி அவன் உறங்கி விட்டான் என்பதனை உறுதி செய்து கொண்டு மெதுவாகக் கட்டிலில் இருந்து இறங்கினாள். அவள் எழும் ஓசை கேட்டு அமுதன் சிறிது அசையவும் அப்படியே அமர்ந்து விட்டாள். அவன் பின் தூங்கவும் அதன் பின்னே வாட்ரோப் அருகில் சென்று சுற்றிலும் கண்களால் துலாவினாள். ஆனால் அவள் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் கட்டிலுக்கு வலது மூலையில் தான் வாட்ரொப் இருந்தது.
அறையில் நைட் லேம்ப் மட்டுமே எரிய... அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவள் டார்ச் கிடைக்குமா என்று தேடிப் போனாள். அந்த அறையில் அவளுக்கு எதுவும் பழக்கம் ஆகவில்லை. எப்படியாவது தேடுவொம் என்று நினைத்து சுற்றி அலைந்து பார்த்தாள். ஆனால் கடைசி வரையிலும் அவளுக்கு ஒன்றும் கிடைக்கவே இல்லை. என்ன செய்ய என்று யோசித்தவளுக்கு திடீரென்று விக்கல் எடுக்க... அதனை அமுதனுக்குக் கேட்காமல் இருக்கக் கரங்களால் மூடிக் கட்டுப்படுத்த முயற்சித்தாள். ஆனால் அது முடியாது போக... அவளது முகத்திற்கு முன் தண்ணீர் குவளை இருக்க.. வேகமாக அதனைப் பருகியவள் அப்பொழுதுதான் நிற்கவும் உஃப் என்று திரும்பி எழுந்தாள். அவள் முன் அமுதன் தான் அவளை ஆழமாகப் பார்த்தவாறு நின்று இருந்தான். அவனது பார்வையில் இதயம் பலவாறுத் துடிக்க... அவனது கரத்தில் இருந்தக் குவளையினைப் பார்த்தவளுக்கு எங்காவது முட்டிக்கலாம் போல் இருந்தது.
"இங்கே என்ன பண்ணிட்டு இருக்க", அமுதன்.
"ம்ம்ம்.. அது...", ராஜி தடுமாற
"ம்ம் சொல்லு", அமுதன்.
"பூச்சி பூச்சி இருந்தது.. அதுதான்", ராஜி.
அவன் நம்பாமல் பார்க்கவும் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தாள். அவளது திரு திரு முழியினைக் கண்டு என்ன நினைத்தானோ
"போய் படு டென்சன் பண்ணாம", அமுதன்.
அவ்வளவுதான் விரைவாகச் சென்றவள் நொடிக்குள் கண் அயர்ந்து ஆழ்ந்து உறங்கியும் போனாள்.