அத்தியாயம் 11

111 15 20
                                    

ரம்யா தனது ஹாஸ்டலில் சிந்தனையுடன் அமர்ந்து இருந்தாள். திடீரென்று அவன் அழைத்ததும் தான் போக வேண்டுமா என்று நினைத்தவள்... மனம் போக தானே கூறுகின்றது என எண்ணியவள் தனது தயக்கங்கள் தாண்டி
ஒரு முடிவுடன் ரம்யா ஹாஸ்டலில் சொல்லிக் கொண்டு கிளம்பும் தருணம் வெளியில் வேதாவின் கார் நின்றது.. அவளுக்கே ஆச்சர்யம் தான் என்றாலும் அவனின் முகம் பார்க்க துணிவு இன்றி அவன் முன் பக்கக் கதவினைத் திறந்துவிடவும் அமர்ந்தவள் அதன் பின் வாயினைத் திறக்கவில்லை. காரில் ரேடியோவினை ஆன் செய்ய... அந்த சூழலுக்குத் தகுந்த பாடல் அவர்களின் மன நிலையினை எடுத்துக் காட்டியது....

......

தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும்
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனதில் ஏனொ அடம் அடம்
ஓருவர் பார்த்தால் மூடும் உடைபடும்

ஏ பெண்மையே கர்வம் ஏனடி வாய் வரை வந்தாலும்
வார்தை மரிப்பது ஏனொ ஏனொ ஏனொ
ஏ ஸ்வாசமே உடல் மேல் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாததே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்

ஓ காதலா
உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலன் இல்லை இல்லை இல்லை

ஓ காதலா
ஓர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறு வார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

.......

(ithu entha movie song kandu pidinka drss... without using google search...)

வேதாவும் அவளிடம் எதுவும் பேசவில்லை. நேரே வீட்டினை அடைந்தவர்கள் யுவா வரவும் ரம்யா அவனிடம் சாதாரணமாக பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டாள். யுவாவும் ரம்யாவிற்கான அறையினைக் காட்டிப் பின் ராஜியினைச் சந்திக்கச் செல்ல முடிவு எடுத்து சங்கர் தேவனுக்கு கால் செய்து பேசி கிளம்பினர்.

கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin