• 4 •

94 14 25
                                    

               கலவன் உச்சிநோக்கிப் பயணப்பட, முகத்தில் மருந்துக்கேனும் மலர்ச்சியின்றி அமர்ந்து கொண்டிருந்தாள் ஆலியா.

எப்படியாவது இன்னும் இரு நாட்களில் நடக்கவிருக்கும் விவாதப் போட்டிக்கு என்ன நடந்தாலும் சென்றே ஆக வேண்டும் என்று எண்ணியவளுக்கு அழுது அடம்பிடிக்கத் தோன்றியது. ஆனால் அது முடியாமல் ஓரமாய் அமர்ந்திருக்கத்தான் முடிந்தது.

சற்று முன்னர் நர்சரியில் இருந்து வீடுவந்தவுடன் சப்பாத்துக்களை எறிந்துவிட்டு டீவிக்கு முன்பு சம்மனமிட்டவளை இழுத்துச் சென்று முகங்கை கால் அலம்ப விட்டு உடைமாற்ற வைத்துவிட்டு வந்தாள். மற்ற இரண்டும் ஆலியா இழுத்தும் வராமல் காந்தம்போல செல்போனுடன் ஒட்டிக்கொண்டு மூலையில் கிடந்தன(ர்).

சும்மா உட்கார்ந்து கொண்டிருக்காமல் சந்தனகுமாரியிடம் சென்று ஏதாவது உதவி செய்யலாம் என்று எண்ணிக்கொண்டவள் எழுந்து சென்றாள்.

சமையலறையில் போஞ்சியின் நாருரித்து உடைத்து அரிந்து கொண்டிருந்த சந்தனகுமாரியிடம் சென்று ஏதேனும் வேலை உள்ளதா என்று கேட்டவளிடம் அவர் இல்லையென்று சொல்லவும் இவள் சும்மாயிராது அங்கே வெளிப்பக்கமாய் இருந்த கதவுக்கருகில் உலரப் போட்டிருந்த பலாவிதைகளை எடுத்துத் தோலை உரிக்கத் தொடங்கினாள்.

அவர்கள் இருவரும் பொதுவாகப் பேசியதில் நேரம் போவதே தெரியாமல் போனது.

பகல் சாப்பாடுகூட ஒழுங்காகத் தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை அவளுக்கு. உணவுக்குழாயும் சோகம்கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்த்த முயல்வதாய்த் தோன்றியது.

தவம்கிடந்து காலத்தைக் கடத்தியவளுக்கு அன்று எதிலுமே நாட்டமில்லாது போகவே தன் செல்போனை எடுத்து சும்மா அதன் திரையில் கட்டைவிரலால் கோடு இழுத்துவிட்டுக் கொண்டிருந்தாள். படிப்புத் தேவையையும் அவசியமான அழைப்புக்களையும் தவிர வேறெதற்கும் அதனைப் பாவிப்பதற்கு அவளுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now