• 9 •

68 11 36
                                    

               வெள்ளைப் பளிங்குத் துண்டுபோல வானிலே உலவிக்கொண்டு தன்னை மறைக்கப் பிரயத்தனைப்படும் முகில்க் கூட்டத்தைக் கிழித்து வெளியே வந்து முகம் காட்டும் சந்திரன். அவனுக்குக் கொழுப்புக் கூடினால் நான் சும்மாயிருப்பேனா என்றபடி மீண்டும் மீண்டும் சந்திரனைத் தனக்குள் அமுக்கி மறைக்க முயலும் மேகங்கள்.


அதைப் பார்க்கையில் ஆலியாவுக்கு ஞாபகம் வந்தது அந்த விவாதம்தான். அந்த நாளின் ஞாபகங்களை அந்த ஒரு வாரத்திற்குப் போதுமாக்கிக் கொண்டாள். இடைக்கிடை அங்கு அவள் கேட்டு வியந்த வார்த்தை ஜாலங்களை ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுதெல்லாம் முன்னெப்போதும் இல்லாதவாறு உதய சூரியனிலும் மிதக்கும் மேகங்களிலும் பொங்கும் அலைகளிலும் தலையாட்டும் தென்னைகளிலும் கடற்கரை மண்ணுக்குள் ஓடி ஒளியும் நண்டுகளிலும் துள்ளும் மீன்களிலும் ஜொலிக்கும் நிலவிலும் கண் சிமிட்டும் விண்மீன்களிலும் கிறுகிறுக்கும் வண்டுகளிலும் உரசும் தென்றலிலும் படிப்படியாய்க் கவியும் இருளிலும் வெளுக்கும் வானிலும் பறக்கும் பட்சிகளிலும் கீற்றிடும் மின்னலிலும் காணும் கனவுகளிலும் படிக்கும் எழுத்துக்களிலும் எழுதும் பேனாவிலும் இதுவரை இருந்திடாத ஒரு புது உத்வேகத்தை உணர்ந்தாள் அவள்.

"..Just keep inking. Nothing can stop you

அந்த வார்த்தைகளில் கட்டுண்டாற்போல தனக்குள் பிறந்த புது நம்பிக்கையுடன் நடமாட ஆரம்பித்தாள். இடையிடையில் பலதும் நினைத்துக் கலங்கும் மனதுக்கு மீண்டும் மீண்டும் தைரியம் சொல்லி சரிப்படுத்திக் கொண்டாள். 

அந்த வார்த்தைகளை ஒரு தடித்த அட்டையில் குண்டு குண்டு எழுத்துக்களால் எழுதி பெரிதாக அவளது அறை சுவரிலும் ஒட்டி வைத்தாள். அடிக்கடி அதனைப் பார்த்து மனதை நிறைத்துக் கொள்வாள். 

காலையிலிருந்து நாளின் முடிவு வரைக்கும் வழக்கமான வேலைகளையே செய்தவள் எழுதுவதற்காக எடுக்கும் நேரத்தை வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now